பாலிவுட்டின் பிரபல நடிகை கியாரா அத்வானி..!! கிளாமரில் பாரபட்சம் காட்டாத கிளிக்ஸ் இதோ..!
நடிகை கியாரா அத்வானி கலக்கல் கிளாமர் லுக் போட்டோஸ் ரிலீஸ் ஆகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி.
அழகு, நடிப்பு திறமை, கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் விதம் என பல்வேறு அம்சங்களால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள அவர், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா துறையில் அறிமுகமான காலத்திலிருந்து தற்போது வரை கியாரா அத்வானியின் பயணம் பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது.
இதையும் படிங்க: நாளானாலும் ஆறாத ரணம்.. யாருக்குத்தான் துரோகம் நடக்கவில்லை?..!! தேசிய விருது சர்ச்சைக்கு மத்தியில் மனம் திறந்த டி. இமான்..!
ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், பின்னர் தனது திறமையின் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக, காதல், ஆக்ஷன், வாழ்க்கை வரலாறு என பல்வேறு விதமான படங்களில் நடித்ததன் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
கியாரா அத்வானி கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘ஃபக்லி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்தப் படம் மூலம் பாலிவுட்டில் தனது பயணத்தை தொடங்கிய அவர், ஆரம்ப காலங்களில் பெரிய அளவில் கவனம் பெறவில்லை என்றாலும், தொடர்ந்து தனது நடிப்பு திறனை மேம்படுத்திக் கொண்டார்.
இதையும் படிங்க: சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் தேஜா லட்சுமி..!! மகளுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் ஊர்வசி..!