உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் லுக்கில் மாறிய சாரா அலிகான்..! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கலக்கல் புகைப்படங்கள்..!
உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் லுக்கில் மாறிய சாரா அலிகான் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகை சாரா அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
பிரபல நடிகர் சயீப் அலிகானின் மகளான இவர், சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு உடல் எடை அதிகமாக இருந்த நிலையில், தற்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் தோற்றத்தில் வலம் வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: தகதகவென மின்னும் புடவையில் ஐஸ்வர்யா லட்சுமி..!! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!
இந்தியத் திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக, பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர், நடிகைகளின் பிள்ளைகள் திரைப்படங்களில் அறிமுகமாவது புதிதல்ல.
தங்களது பெற்றோரின் புகழ் ஒருபுறம் இருந்தாலும், திரையுலகில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் சினிமாவில் களமிறங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர் நடிகை சாரா அலிகான்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் சயீப் அலிகான் மற்றும் நடிகை அம்ரிதா சிங்கின் மகளான சாரா அலிகான், தனது குடும்பப் பின்னணியின் காரணமாகத் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தார். இருப்பினும், தனது நடிப்புத் திறமை மற்றும் தனித்துவமான அணுகுமுறை மூலம் சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், சாரா அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் சாரா அலிகான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: சிம்புவுக்கும் வெற்றிமாறனுக்கும் சண்டை..!! ‘அரசன்’ படத்தின் நிலைமை என்ன.. குழப்பத்தில் ரசிகர்கள்...!