ஆஹா.. என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..! 'கூலி'க்கு போட்டியாக இன்று ரீ ரிலிசான 'கேப்டன் பிரபாகரன்'..!
விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' படம் இன்று அதிரடியாக ரீ ரிலிசாகி உள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் கொடை வள்ளலாகவும், மக்கள் மனங்களில் வீர நாயகனாகவும், திகழ்ந்த நடிகர் விஜயகாந்தின் 100வது திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ இன்று, 34 ஆண்டுகளுக்குப் பிறகு, திரையரங்குகளில் மீண்டும் வெளியாகியுள்ளது. மறைந்த விஜயகாந்தின் ரசிகர்களுக்கு இது ஒரு கண்ணீர் கலந்த கொண்டாட்டமாக மாறியுள்ளது. ரீ-ரிலீஸ் செய்தி வெளியாகியதும், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படி இருக்க இன்றைய நவீன காலகட்டத்தில் போட்டி சூழ்நிலையில் கூட, ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒரே நேரத்தில் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. அதுவும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது, இது நடந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதன் மூலம் விஜயகாந்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளனர். இந்த சூழலில் ‘கேப்டன் பிரபாகரன்’, 1991 ஆம் ஆண்டு வெளியானது. தமிழ்நாட்டைத் திகிலடைய வைத்த வீரப்பன் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில், விஜயகாந்த் ஒரு தீவிரமான வனத்துறை அதிகாரி பாத்திரத்தில் தோன்றினார்.
படம் வெளியானதும், அது வியப்பும், வரவேற்பும் உருவாக்கியது. விறுவிறுப்பான திரைக்கதை, தடபுடலான அரசியல் பின்னணி, மற்றும் வன ஆக்கிரமிப்பு எதிர்த்து போராடும் அதிகாரியின் கோபம் என பல பரிமாணங்களை கொண்டிருந்தது. இந்த நிலையில் ‘கேப்டன் பிரபாகரன்’ விஜயகாந்தின் 100வது திரைப்படமாக உருவானது. அதனால், ரசிகர்களிடையே தனிப்பட்ட உறவுமுறையை உருவாக்கியது. அவர் கதாபாத்திரத்துடன் அடையாளமடைந்த அளவிற்கு, அந்த வேடம் அவரது வாழ்க்கையைப் பிரதிபலித்தது. சமூக நீதிக்காக போராடும் குணம், ஒழுங்கும் உறுதியும் கொண்டவர் என்ற பெயரை அவருக்கு தேடித்தந்தது.
குறிப்பாக இந்தப் படத்தில், விஜயகாந்த் மட்டுமின்றி, பலர் கதாபாத்திரங்களின் மூலம் முக்கிய பங்களிப்பு அளித்தனர்.. அதன்படி, மன்சூர் அலிகான், இப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். அவரது நடிப்பும் வலிமையான அழுத்தமும் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.
ரம்யா கிருஷ்ணன், ரூபினி, லிவிங்ஸ்டன் என இவர்கள் பலதரப்பட்ட பாத்திரங்களில் தனது திறமைகளை காட்டினர். மேலும் சரத்குமார் தனது சிறப்பு தோற்றத்தில் வந்து, படத்துக்கு பலம் சேர்த்தார். அதோடு ஆர்.கே. செல்வமணி இயக்கிய இப்படம், விஜயகாந்துடன் அவர் பணியாற்றிய இரண்டாவது திரைப்படம். இயக்குநரின் கதையமைப்பு மற்றும் பட இயக்க பாணி பெருமளவில் பாராட்டப்பட்டது. இளையராஜா இசையமைத்த பாடல்கள், பின்னணி இசைகள் இப்படத்தின் உணர்வும், உணர்ச்சிகளும் அதிகரிக்கச் செய்தன. குறிப்பாக, "ஆட்டமா தேரோட்டமா" பாடல் ரசிகர்கள் மனதில் இன்னும் நிலைத்திருக்கிறது. ரம்யா கிருஷ்ணனின் நடனமும், இளையராஜாவின் இசையும் சேர்ந்து படத்தின் மியூசிக்கல் ஹைலைட்டாக இருந்தது. இந்த ரீ-ரிலீஸ், வெறும் திரைப்படம் திரைக்கு வருவதல்ல.
இதையும் படிங்க: எவ்வளவு வேணாலும் கலாய்ங்கபா பரவாயில்ல.. நான் இனி நடிக்க மாட்டேன் - நடிகை சமந்தா வேதனை..!
இது, ஒரு வரலாற்றின் பார்வை, ஒரு சின்னத்தின் நினைவாக்கம். விஜயகாந்த், நடிகராக மட்டுமல்லாமல், அரசியல்வாதியாகவும், மனித நேய செயற்பாடுகளின் மூலமாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரின் படங்களை மீண்டும் திரையில் காண்பது என்பது, ரசிகர்கள் மட்டும் அல்லாமல், திரைப்பட வரலாற்றிலும் ஒரு முக்கிய திருப்புமுனையாக உள்ளது. இப்படியாக இன்றைய வெளியீட்டை முன்னிட்டு, விஜயகாந்த் ரசிகர்கள் பல்வேறு இடங்களில், பாலாபிஷேகம் பேனர், ஹோர்டிங், கேக் வெட்டுதல், கேப்டன் உடைகள் மற்றும் முகமூடிகள் அணிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான திரையரங்குகள், வழக்கமாக பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்ய முன்வந்ததில்லை. ஆனால், ‘கேப்டன் பிரபாகரன்’ படம் இன்று 400 திரையரங்குகளில் வெளியாவதை பார்க்கும் போது, விஜயகாந்தின் பிம்பம், அவரது பின்தொடர்பவர்கள், மற்றும் இந்த திரைப்படத்தின் தாக்கம் என்னவென்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே திரையரங்குகளுக்கு மீண்டும் கேப்டன் வந்திருக்கிறார்.
விஜயகாந்த், தனது நடிப்பின் மூலம் உருவாக்கிய மக்கள் நாயகனின் பிம்பம், ஒரு தலைமுறையைக் கடந்தும் இன்னொரு தலைமுறையை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. ‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெறும் ஒரு திரைப்படம் அல்ல, அது நாம் மறக்கக்கூடாத ஒரு நடிகரின் நினைவாகவும், ஒரு சமூக நோக்கமிக்க போராளியின் கதையாகவும் தமிழர் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கும்.
இதையும் படிங்க: விஜய் அரசியல் என்ட்ரியும் ஆவேச பேச்சும்..! டி.ராஜேந்தர் கொடுத்த ஷாக்கிங் ஸ்பீச்.. கலங்கிய ரசிகர்கள்..!