"கூலி" பட இசை வெளியீட்டு விழா வீடியோவால் கலங்கடித்த படக்குழு..! இன்னும் என்னலாம் பண்ணப்போறாங்களோ..!
கூலி பட இசைவெளியீட்டு விழா குறித்த தேதியை வீடியோ மூலமாக பிரமாண்டமாக வெளிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக பல தலைமுறைகளையும் கடந்து இருந்து வருபவர் தான் நம் ரஜினிகாந்த். இதுவரை போல் தற்பொழுது உள்ள இளைய தலைமுறைகளின் நம்பிக்கையை பெற்று வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருபவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. இப்படி இப்பட்ட இயக்குனரும் ஹீரோவும் இணைந்தால் எப்படிப்பட்ட அருமையான படம் உருவாகும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இவர்களது கூட்டணியில் உருவாகியிருக்கிறது 'கூலி' திரைப்படம். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில், அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள், நட்சத்திரக் கூட்டணியுடன் கூடிய நடிகர்கள் பட்டியல், லோகேஷின் மாஸ் டைரெக்ஷன் என இவை அனைத்தும் சேர்ந்து படம் பற்றி மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஹிட் கொடுத்த "கூலி"யின் 'மோனிகா' பாடல்...! நன்றி தெரிவித்த நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர்..!
அதுமட்டுமல்லாமல் ரஜினியின் கெரியரில் இது ஒரு புதிய முயற்சி என்றும், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பது காரணமாக, இந்த திரைப்படம் புதிய யுக்திகளோடு, சிக்கலான கதைக்கூட்டமைப்புடன் அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா, மற்றும் ஸ்ருதிஹாசன் என பல பிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'சிக்கிடு', 'மோனிகா', 'பவர் ஹவுஸ்' போன்ற பாடல்கள் இணையத்தில் வெளியாகியவுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
மேலும், அனிருத் இசையமைத்த பாடல்கள் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் மில்லியன் கணக்கில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பரபரப்புக்கு மத்தியிலேயே, 'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, 'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் "ஆகஸ்ட் 2ம்" தேதி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதையடுத்து, படக்குழு விழாவை முன்னிட்டு ஒரு சிறப்பு புரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ரசிகர்களிடம் ஏற்படும் ஆர்வம், இசையின் சக்தி, லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஸ்டைல், அனிருத் இசையின் தாக்கம் என அனைத்தும் இருக்கும் என்பதை காண்பிக்கும் வகையில் இருக்கின்றன.
👉🏻 Get ready for #CoolieUnleashed vidio - click here 👈🏻
இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான தகவல் வெளியாகியதுடன், சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகின்றன. இந்த இசை வெளியீட்டு விழா, அனிருத் மற்றும் ரஜினி கூட்டணியின் முக்கிய காட்சிகளை கொண்டிருக்கும் என்றும், படம் பற்றிய புதிய அப்டேட்டுகள், 'கூலி' பற்றிய இயக்குநர் மற்றும் நடிகர்களின் உரைகள், சில சர்ப்ரைஸ் ரிவீல்கள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இந்திய சுதந்திர தினத்துக்குப் முந்தைய நாளான ஆகஸ்ட் 14ம் தேதி ‘கூலி’ உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ், லோகேஷ், ரஜினி, அனிருத் என ஒவ்வொருவரும் தங்களது பங்குகளை உறுதியாகச் செய்யத் தொடங்கியுள்ள இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாற்று சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர். 'கூலி' திரைப்படம், ஒரு சாதாரண ரில்சாக மட்டுமல்லாமல்.. அது ரஜினி ரசிகர்களுக்கான திருவிழா, தமிழ் சினிமாவுக்கான சாதனை நிகழ்வாக மாறி வருகிறது. அந்த விழாவின் முதற்கட்டம் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் தெரியும்.. இந்த நிலையில், புரோமோ வீடியோவில் இருப்பதை போல மிகப்பெரிய கூட்டம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை காட்டிக்கொடுக்கிறது.
இசை வெளியீட்டு விழாவில் ரஜினி உட்பட பலர் பங்கேற்கிறார்களா? இன்னும் சில சர்ப்ரைஸ் அறிவிப்புகள் வருமா? என அனைத்தை குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க வைத்திருக்கின்றன. ஆகவே, "கூலி" படத்தின் இசை வெளியீட்டு விழா, மற்றும் பிரமாண்ட ரிலீஸ் என அனைத்தும் சேர்ந்து தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிக முக்கியமான நிகழ்வாக உருவாகியிருக்கிறது என்பது உறுதி.
இதையும் படிங்க: பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் "கூலி"..! புது தளபதி-யை காண தயாரா.. நெகிழ்ச்சியில் ரஜினி..!