பீடி பத்தவச்சது ஒரு குத்தமா.. கூலி படத்துல ரஜினிக்கு சிகரெட் பற்ற வைத்த சர்ச்சை - அமீர்கான் ஓபன் டாக்..!
கூலி படத்துல ரஜினிக்கு சிகரெட் பற்ற வைத்த சர்ச்சை குறித்து வெளிப்படையாக அமீர்கான் பேசி இருக்கிறார்.
கடந்த வாரம் வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான "கூலி" திரைப்படம் தமிழ் திரையுலகை மட்டும் அல்லாது, இந்தியா முழுவதும் பேசப்படும் சூப்பர் ஸ்டார் படமாக மாறியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் கதைக்கருவும், ஆக்ஷன் காட்சிகளும், அனிருத் இசையும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தாலும், திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் இடம்பெற்ற ஒரு சிறிய காட்சி, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அது என்னவெனில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், அமீர்கான், ரஜினிகாந்திற்காக பீடி பற்றவைத்து தரும் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. இந்த காட்சி குறித்தே சமூக வலைதளங்களில் திடீர் அதிருப்தியும், கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியபோது, அதற்கான பதிலை அமீர்கான் நேரடியாக அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "ஆமாம். கூலி படத்தில் நான் நடித்த ரோலில், ரஜினி சார் பீடி புகைக்க, அதை பற்ற வைப்பது தான் என் வேலை. அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. காரணம் நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அவருடன் ஒரு காட்சியில் நடிக்கிறதென்றால், அது எனக்கு மிகப்பெரிய பெருமை. அந்த பீடி ஒரு சிகரெட் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, நான் அதை மட்டும் தான் செய்ய நேர்ந்தாலும் கூட, நான் சந்தோஷமாக ஒப்புக்கொள்வேன்" என உருக்கமாக பதிலளித்துள்ளார்.
மேலும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் தகவல் ஒன்றும் இப்போது வெளியாகியுள்ளது. "கூலி" படத்தில் நடித்ததற்காக அமீர்கான் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்பது தான். இதனை குறித்து அமீர்கான் பேசுகையில், "ரஜினி சார் மீது எனக்கு அதிக மரியாதையும், அனுபவமும், ரசிகர் அபிமானமும் உள்ளது. அவருடன் நடித்ததே பணத்தைவிட பெரிய பரிசு கிடையாது. எனவே இந்த வாய்ப்புக்காக நான் சம்பளம் கேட்கவில்லை" என்றார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அமீர்கான் மீது மதிப்பையும், மரியாதையையும் பெருக்கியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது படங்களில் விரிவான காமியோ ரோல்கள் மூலம் கதைக்கு உறுதி சேர்ப்பவராகவே அறியப்படுகிறார்.. ‘விக்ரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் முக்கிய விருந்தினர் தோற்றங்கள் கதையின் முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.
இதையும் படிங்க: ஜெயிலர் வசூலை வேகமாக நெருங்கும் 'கூலி'..! இதுவரை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..!
‘கூலி’யிலும் இந்த பாணியில், அமீர்கான், ஒரு முக்கியமான பரிணாமதன்மை உள்ள பீடி காட்சி மூலம் ரஜினியின் கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை அளிக்கிறாராம். அந்தக் காட்சி ஒரு “அறிமுகம்” அல்ல அது ஒரு “நினைவூட்டல்” என்று இயக்குனர் அணுகும் விதம் தான் இந்த கதாபாத்திரத்திற்கும் தீர்மானிக்கும் மரபுக்குமான சங்கமம். ஆகவே "கூலி" படம் ஒரு வசூல் வெற்றிக்கோ அல்லது ரசிகர் எதிர்பார்ப்புக்கோ மட்டுமல்ல.. அது சினிமா நட்புகளின் எல்லை கடந்த கூட்டணிகளையும், ஒருவருக்கொருவர் வைத்த மதிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு பயணமாகும். அதன்படி அமீர்கான் மற்றும் ரஜினிகாந்த் சந்திப்பு என்பது வெறும் ஒரு சினிமா காட்சி அல்ல, இரு சினிமா புரட்சிகர நட்சத்திரங்களின் உருக்கமான மனித உறவின் பிரதிபலிப்பு.
அந்த பீடி காட்சியை விமர்சிக்கலாம்.. ஆனால் அது ஒரு நட்சத்திரத்தின் நேர்மை மற்றும் வெறும் சம்பளத்தைக் கடந்து செல்வதற்கான சினிமா அன்பின் அளவை காட்டுகிறது.
இதையும் படிங்க: "கூலி" படத்தை இணையத்தில் சிதற விட்ட சிறுவண்டுகள்..! அதிர்ச்சியில் படக்குழு..!