"மோனிகா" பாடலுக்கு பூஜா ஹெக்டே அணிந்த ட்ரெஸ் இவ்வளவு காஸ்லியா..! அரண்டுபோன நெட்டிசன்கள்..!
மோனிகா பாடலுக்கு பூஜா ஹெக்டே அணிந்த 'வெர்சேஸ் மெடுசா' உடையின் விலையை கேட்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் தற்பொழுது பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள படம் என்றால் அதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கியிருக்கும் ‘கூலி’ திரைப்படம். இப்படி இருக்க, சமீபகாலமாக இப்படத்தின் அதிரடி அப்டேட்டுகள் தொடர்ந்து நாள் தவறாமல் வந்து கொண்டே இருப்பதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்த சூழலில் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் தனது இசையில் இன்னொரு மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார். சமீபத்தில் வெளியான பாடல்களின் பின்னணி இசை, பாடல் வரிகள் மற்றும் இசை அமைப்பு என அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
குறிப்பாக, சமீபத்தில் வெளியான "மோனிகா" பாடல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் இருக்க, அமீர் கான், நாகர்ஜுனா, சத்யராஜ், சவுபின் ஷாஹிர், பகத் பாசில், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருகின்றனர். இந்த திரைப்படத்தின் பலம் கதைக்கோட்டிலும், அதில் இணைந்திருக்கும் நடிகர்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு பாடலிலும் புதிய முன்னேற்றத்தை கொடுக்கும் முயற்சியும் தெளிவாகக் காணப்படுகிறது. இப்பயி இருக்க சவுபின் ஷாஹிர் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடனமாடியிருக்கும் ‘மோனிகா’ என்ற பாடல், இசையும், காமெரா ஆங்கிலுகளும், வண்ணமும் சேர்ந்து ரசிகர்களுக்கு தரமான திரையனுபவத்தை அளிக்கிறது. இந்த பாடலில் பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கும் தோற்றம், அணிந்திருந்த ஆடைகள், ஸ்டைலிங் ஆகியவை தற்போது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஃபேஷன் விமர்சகர்களும் அந்த அணிகலன் மற்றும் உடை தொடர்பான விவரங்களை ஆராயத் தொடங்கியுள்ளனர். அதன்படி ‘மோனிகா’ பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த அழகான அலங்கார கவுன் தற்போது ஃபேஷன் உலகின் கவனத்தை பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி, அந்த கவுன் பெயர் ‘Versace Medusa 95 Draped Gown’ எனத் தெரியவந்துள்ளது. இந்த உலகப்பிரசித்தி பெற்ற ப்ராண்ட் உடையின் விலையை கேட்டு பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். காரணம் பூஜா ஹெக்டே அணிந்திருந்த இந்த கவுனின் விலை சுமார் ரூ.5 லட்சமாம். ஒரு பாடலுக்காக இந்த அளவுக்கு மொத்தமாக தயாரிக்கப்பட்ட காஸ்ட்யூம், தயாரிப்பு தரத்தை கொடுக்க வேண்டுமா.
இப்படத்தில் பூஜா ஹெக்டே சிறப்பு தோற்றத்தில் மட்டும் இல்லாமல், முக்கியமான பாடலின் நடனத்தால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவரது நடனம், அசைவுகள் மற்றும் அழகிய ஸ்டைலிங் மூலம் பாடல் ஒரு வித அபூர்வ அனுபவமாக மாறியுள்ளது. இது குறித்தும் இணையத்தில் பாராட்டுக்கள் காணப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த டேன்ஸ் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..! பூஜா ஹெக்டே வெளியிட்ட "மோனிகா" பாடல் வீடியோ..!
பலர், இந்த படம் வரும் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதை ஆவலோடு எதிர்நோக்கி பார்த்து வருகின்றனர். ‘கூலி’ திரைப்படம் ஒரு மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் அனுபவமாக அமையவுள்ளது என்பதை இதற்கான முன்னோட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் தனது ரசிகர்களை கவரும் விதமாக திரைக்கு வரவுள்ளார். அதே நேரத்தில், ‘மோனிகா’ பாடல் மற்றும் பூஜா ஹெக்டேவின் தோற்றம் திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பை கொடுத்துள்ளது.
இந்த சூழலில், ரஜினியின் திறமையான நடிப்பு, பிரமாண்ட தயாரிப்பு, சவாலான இயக்கம் மற்றும் பிரமிப்பூட்டும் இசை என இவை அனைத்தும் சேர்ந்து 'கூலி' திரைப்படத்தை 2025ஆம் ஆண்டின் மிக முக்கிய படமாக மாற்றி இருக்கின்றன.
இதையும் படிங்க: இன்று மாலை வெளியாகிறது பூஜா ஹெக்டேவின் 'மோனிகா' பாடல்...! உற்சாகத்தில் மிதக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!