"கூலி" படத்தின் "மோனிகா" பாடலுக்கு ஆட்டம் போட ரெடியா..! கவர்ச்சியில் கலக்கும் பூஜா ஹெக்டே.. நடன காட்சி இதோ..!
அனைவரது கவனத்தையும் ஈர்த்த பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி நடன பாடலான மோனிகா பாடலுக்குண்டான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொடர்ந்து தன் வெற்றிப் பயணத்தை இளைய இயக்குனர்களுடன் இணைந்து தீவிரமாக கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'வேட்டையன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து உருவாகியுள்ள ரசிகர்களின் மனதில் மிகுந்த எதிர்பார்ப்புக் கொண்ட திரைப்படம் தான் ‘கூலி’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். மிகப்பெரிய மற்றும் பிரம்மாண்ட நட்சத்திரக் கூட்டணியுடன் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த சூழலில் தற்பொழுது உருவாகியுள்ள புதிய தலைமுறை இயக்குநர்களில் மிகவும் பிரபலம் அடைந்த இயக்குநரான லோகேஷ் கனகராஜ், இந்த முறை சூப்பர் ஸ்டாரை வைத்து கூலி படத்தை இயக்கியிருப்பது பெரிய சினிமா சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இவர், 'கூலி' படத்தில் ரஜினியின் எளிமையான தோற்றமாக்கி, கூலித் தொழிலாளியை மையமாகக் கொண்டு, அவர் எதிர்கொள்ளும் பிரம்மாண்டமான சமூக அரசியல் சிக்கல்களைச் சித்தரிக்கும் படமாக உருவாக்கி இருக்கிறாராம்.
இது ஒருபக்கம் இருக்க அனைவரது கவனத்தையும் ஈர்க்க முக்கிய காரணம் ‘கூலி’ படத்தில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றியிருப்பது தான். தெலுங்கு சினிமாவின் ‘கிங்’ என்று அழைக்கப்படும் நாகார்ஜுனா, கன்னட சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் உபேந்திரா, மலையாளத்தில் பிரபலமான சோபின் சாஹிர், தமிழ் சினிமாவின் பழமையான மற்றும் நம்பிக்கை நாயகனான சத்யராஜ், மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர் கான், ஒரு சிறப்பு கேமியோ தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருப்பது, ரசிகர்களிடம் மிகுந்த ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் கிளப்பியுள்ளது. இப்படம் தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால், இப்படம் முழுமையான 'பான் இந்தியா' திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இப்படி பலரது கவனத்தையும் ஈர்த்த இப்படத்திற்கு இசை அமைத்துள்ள அனிருத், கடந்த வாரம் வெளியான முதலாவது பாடல் ‘சிக்கிட்டு’ மூலம் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த பாடலில், ரஜினியின் ஸ்டைலும், அட்டகாசமான நடனமும், கூலித் தொழிலாளி வாழ்க்கையின் பாணியும் ஒன்றாக இணைந்து இருந்ததால் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவியது இப்பாடல்.
இதையும் படிங்க: சினிமா தராத போதையை குடும்பம் தான் கொடுத்தது.. திருமண வாழ்க்கை சவால்கள் நிறைந்தது.. நடிகை விசித்ரா உருக்கம்..!
இப்படி இருக்க, ‘சிக்கிட்டு’ பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தற்போது இரண்டாவது பாடலான 'மோனிகா' பாடல் ரிலீசுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உண்மையை சொல்ல போனால், இது ஒரு சிறப்பு பாடலாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதில் நடிகை பூஜா ஹெக்டே, தனது கவர்ச்சி நடனத்துடன் ரசிகர்களை கவர இருக்கிறார். ஆகவே பலரது கவனத்தையும் ஈர்க்கும் இந்த பாடல் ஜூலை 11-ம் தேதியான நாளை மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.
இதற்கான அறிவிப்பு வீடியோ தற்போது சன் பிக்சர்ஸ் மற்றும் கூலி படக்குழுவின் சமூக ஊடக பக்கங்களில் வெளியிடப்பட்டு இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் நாளை வெளியாக உள்ள மோனிகா பாடலின் சிறப்பம்சம் என்றால், இந்த பாடல், ஒரு கிளப் டான்ஸ் பின்னணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பூஜா ஹெக்டே, இந்த பாடலுக்காக ஸ்பெஷல் காஸ்ட்யூம்களுடன், பல நாட்கள் நடன பயிற்சி மேற்கொண்டுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாடலில் அனிருத் இசைதான் மிகவும் முக்கியத்துவம் பெறுவதுடன், லிரிக்ஸ் மற்றும் நடன அசைவுகளும் ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்யும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படம், ஆகஸ்ட் 14-ம் தேதி உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. இந்த படம், இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் புதிய சாதனைகளை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மிகப்பெரிய வெற்றியை கொடுத்த "3BHK" படம்..! படக்குழுவின் அட்ராசிட்டி வீடியோ ரிலீஸ்..!