நான் இருக்கிறதாலே படம் ஓடாதா... அதை எப்படி சொல்லுறீங்க - நடிகர் புகழ் வேதனை..!
நடிகர் புகழ், நான் இருக்கிறதாலே படம் ஓடாது என எப்படி சொல்லுறீங்க என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தன்னிகரற்ற நகைச்சுவை மற்றும் நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் புகழ். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் ஆழமான இடம் பிடித்த புகழ், இன்று வெள்ளித்திரையில் முழு கதாநாயகனாக வலம் வந்துகொண்டு இருகிறார். இப்படியாக புகழ் நடித்த ‘அயோத்தி’ மற்றும் ‘August 16, 1947’ ஆகிய படங்கள், விமர்சன ரீதியாகவும், மக்களிடையிலும் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் ஹீரோவாக அவர் நடித்த 'Mr. Zoo Keeper' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் புகழ் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தனது மன வலியை வெளிப்படையாகப் பகிர்ந்த நடிகர் புகழ், தற்போது திரைப்படங்கள் எதிர்கொள்ளும் நிலைமை மற்றும் தன்னைச் சுற்றி உருவாகும் அவதூறுகளை குறித்து கவலையுடன் பேசினார். அதன்படி அவர் பேசுகையில், " ட்ரைலரோ, போட்டோவோ எதுவும் வந்தா உடனே, 'புகழ் இருக்கானா, இந்த படம் ஓடாது. புகழ் இருக்கானா, இந்த படம் ஜெயிக்காது'னு ஒரு பேச்சு. இதே மாதிரி தான் முன்னாடியும் நடந்தது. வலிமை, எதற்கும் துணிந்தவன், சந்தானம் சார் கூட 2 படம், யானை என இந்த எல்லா படங்களிலேயும் நானும் இருந்தேன். அப்போ இதெல்லாம் பேசல. இப்பதான் இப்படி விஷயங்கள் நடக்குது. இது எனக்கு மட்டுமல்ல. எல்லா நடிகர்களுக்கும் இப்படித்தான் நடக்குது. இப்போ எதுவும் ஆர்கானிக் ஆக இல்ல. எதாவது யாராவது வெளியில் தெரியணும், ஏதாவது பேசணும், வைரலாகணும், ஹாட் டாபிக்காக இருக்கணும்னா, யாரையாவது குற்றம் சொல்றாங்க. அந்த கூட்டம் திட்டமிட்டு வேலை செய்ற மாதிரி இருக்கு. நீங்க என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிச்சீங்கன்னா பரவாயில்ல. ஆனா, ஒரு படத்தை மட்டும் நோக்கி, அந்த படத்துல நான் இருக்கேன்னு சொல்லி முழுசா அதை டாக்சிக் பண்ணிட்றாங்க. அந்த படத்தில் நடிக்கிற ஒவ்வொருவரும் உழைத்திருக்காங்க. அவர்களுக்கு இது கொடுக்குற வலி எனக்கே அதிகமா இருக்கு" என பேசினார்.. இப்படியாக தன்னை விமர்சிப்பது தனிப்பட்ட விஷயமென்றாலும், அதனால் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேட்டி வெளியாகிய பிறகு, பலரும் நடிகர் புகழின் தன்னம்பிக்கை மற்றும் நேர்மையான உரைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரையுலகிலும் பலர், சமீபத்திய காலங்களில் சில படம் ஓடாவிட்டால் காரணம் நடிகர்கள் அல்ல, சமூக ஊடகங்களில் பரவும் "கருத்துக்கள்" தான் என்றும் தெரிவிக்கிறார்கள். இப்படி இருக்க புகழ் பேட்டி ஒரு முக்கியமான விமர்சன அலைக்கு துவக்கமாக இருக்கலாம். சினிமா என்பது ஒரு குழுவின் உழைப்பின் மகத்தான வெளிப்பாடு என்கிற உண்மையை இவ்வாறு மீண்டும் வலியுறுத்துகிறார் நடிகர் புகழ்.
இதையும் படிங்க: ஆசைப்பட்ட காரை பல கோடி கொடுத்து வாங்கிய நடிகை சிவாங்கி..! பல நாள் கனவை நினைவாக்கிய தருணம்..!
சின்னத்திரை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, வெள்ளித்திரையில் தன்னை நிரூபிக்க முயன்றவர் அவர். இன்று ஒரு முழுமையான கதாநாயகனாக, தான் எதிர்கொள்வது சாதாரணமான விமர்சனம் அல்ல, திட்டமிட்ட அவதூறு தாக்குதல் என்கிற உணர்வில் இருக்கிறார். எனவே புகழின் இந்த பேட்டி, திரையுலகில் ஒரு புதிய சிந்தனை தொடக்கமாக இருக்கலாம். ஆர்கானிக் வெற்றியை புறக்கணித்து, சமூக ஊடகங்களின் வழியாக தடுக்கப்படும் சாதனைகள், இன்று பல திறமைமிக்க கலைஞர்களுக்கு தடையாக இருக்கின்றன. புகழ் தனது உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து, ஒட்டுமொத்த சினிமா தொழில்நுட்பக் குழுவுக்காகக் குரல் கொடுத்துள்ளார்.
இது போல உண்மையான குரல்கள் மேலும் பல வெளிப்பட வேண்டிய காலம் இது.
இதையும் படிங்க: மாஸ்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்..! எனது வெற்றியில் உங்கள் பங்கும் அதிகம் என உருக்கம்..!