×
 

கருப்பு நிற உடையில் கண்கவரும் அழகில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..! புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கருப்பு நிற உடையில் கண்கவரும் அழகில் உள்ள  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காபி வித் டிடி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் நம் திவ்யதர்ஷினி. அழகான கண்கள், பாலிஷ் போடும் அளவிற்கு பலபலக்கும் முகம், எத்தனை பேர் இருந்தாலும் தனது சிரிப்பால் அவர்களை மயக்கும் பேரழகு, திரளான கூட்டத்தின் கவனத்தையும் தனது ஒரே வார்த்தையினால் ஈர்க்கும் வல்லமை கொண்டவர். 

வாழ்க்கையில் துவண்டு போனாலும் அடுத்த நொடியே தனது அடுத்த இலக்கை நோக்கி முன்னேறும் துணிச்சல் உடையவர் என இவ்வளவு பேருக்கும் சொந்தக்காரர் தான் டிடி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.

இதையும் படிங்க: வெள்ளை நிற சேலையில் அழகின் மொத்த உருவமாக ஜொலிக்கும் நடிகை அதுல்யா ரவி..!

இவர் தொகுப்பாளனியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பிரபல தொலைக்காட்சியில் அசத்தி வருபவர். என்னதான் பிரபல தனியா தொலைக்காட்சியில் இன்று ரம்யா, ஜாக்லின், பிரியங்கா, மணிமேகலை என நிறைய தொகுப்பாளர்கள் வந்தாலும், 

எப்பேர் பட்ட மிகப்பெரிய பிரபலங்களையும் வைத்து பேட்டி எடுப்பதிலும், ஒரு நிகழ்ச்சியானால் அங்கு கைத்தட்டல்களும் விசில்களும் பரப்பதற்கு காரணமாக இருப்பவர் டிடி. இன்று ஹீரோயின்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்று வலம் வருபவர்கள் மத்தியில் இன்றும் தொகுப்பாளர்களில் 'லேடிஸ் சூப்பர் ஸ்டார்' ஆக இருப்பவர் தான் நம்முடைய டிடி. 

இவர் தன் வாழ்நாள் பயணத்தில் இதுவரை "ஜோடி நம்பர் ஒன்னில் சீசன்கள் 1 முதல் 7 வரையும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும், பாய்ஸ் vs கேர்ள்ஸ், டான்சிங் சூப்பர் ஸ்டார், காபி வித் டிடி, அச்சம் தவிர், அன்புடன் டி டி, ஜோடி பன் அன்லிமிடெட்.

பிக் பாஸ் தமிழ் 2 கொண்டாட்டம், ஏர்டெல் சூப்பர் சிங்கர், என்கிட்ட மோதாதே, டான்சிங் சூப்பர் ஸ்டார், ஸ்பீட் செட் டு கோ, பிக் பாஸ் தமிழ் 4 கொண்டாட்டம், மற்றும் பல பிரபலங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் என அனைத்து பகுதிகளிலும் தொகுப்பாளராக இருந்து பல விருதுகளை வழங்கியும் விருதுகளையும் பெற்றவர். 

இந்த நிலையில் தனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறிய டிடி, தற்பொழுது படங்களிலும் நடித்து வருகிறார், அதுமட்டுமல்லாமல் நீண்ட நேரம் நின்று கொண்டே தொகுத்து வழங்கியதால், 

முழங்கால்களில் பிரச்சனை ஏற்பட்டு தற்பொழுது அவரது கால்களில் ஆபரேஷன் நடந்துள்ளது. 

இன்று டிடி நடக்க முடியாமல் நடந்து வந்தாலும் தன் வாழ்க்கையில் பல போராட்டங்களை கடந்து இன்றும் தனி மனிஷியாக நின்று கொண்டிருக்கிறான்.

இதையும் படிங்க: ஹன்சிகா விவாகரத்து குறித்த செய்தி..! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த கணவர் சோஹைல் கட்டாரியா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share