×
 

"டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தில் தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை மாறன்..! படத்தை இப்படி சொல்லிட்டாங்களே..!

ப்ளூ சட்டை மாறனை கலாய்க்கும் படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல்-ஆ என ரசிகர்கள் சிரித்தபடி கேட்டு வருகின்றனர்.

நடிகர் சந்தானத்தின் படம் என்றால் அதில் கண்டிப்பாக காமெடி இருக்கும் அதில் பேய்களும் கலந்து இருக்கும் என்ற சூழலில் அவரது படங்கள் மாறி வருகின்றன. இப்படி இருக்க, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் அடுத்த பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்களை கூறிவந்த நிலையில், சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் இன்று ஒரே நாளில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது. 

சமீபத்திய நேர்காணலில் பேசிய நடிகர் சந்தானம், எனக்கு உதயநிதி ஸ்டாலினும் நண்பர்தான் அவர் கூப்பிட்டால், ஒரு சில காரியங்கள் எனக்கு செட் ஆனால் கண்டிப்பாக அவருக்காக இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் உதாரணத்திற்கு தற்பொழுது சிம்புவுடன் நடிக்கும் எனக்கு அவர் எந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறாரோ எனது மரியாதை குறையாத வண்ணம் வைத்துள்ளாரோ அதே போல் உதயநிதியும் செய்தால் அவருக்கு துணையாக நிற்பதில் தவறில்லை என தெரிவித்தார். அவர் தெரிவித்த மறுகனமே அவருடைய படத்தின் மீது பாஜகவினர் வழக்கு தொடர்ந்தனர். இதனை அடுத்து தற்பொழுது திருப்பதி பெருமாள் குறித்த பாடலை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர் படக்குழுவினர். 

இதையும் படிங்க: சந்தானத்தை மன்னிச்சிடுங்க பவன் கல்யாண்.. ப்ளீஸ்..! நண்பனுக்காக பேசிய கூல் சுரேஷ்..!

இந்த நிலையில், நடிகர் சந்தானத்தின் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாகியுள்ள இந்த வேளையில் படம் எப்படி உள்ளது என்பதை இங்கு பார்க்கலாம். அதன்படி, இதுவரை எந்த படம் எடுத்தாலும் அதனை விமர்சனம் செய்து பணம் ஈட்டும் யூடியூபர்கள் இன்று அதிகரித்து உள்ளனர். படம் எத்தனை கோடி செலவு செய்து எடுக்கிறார்கள் என்பது எல்லாம் இங்கு பிரச்சனை இல்லை. யூடியூபில் படத்திற்கு உண்டான விமர்சனங்களை எப்படி கொடுக்கிறார்கள் என்பது தான் பல தயாரிப்பாளர்களின் பிரச்சினையாகவே உள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு உரியவர்களை வைத்தே படத்தை எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்து இருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.

அதன்படி பார்த்தால், இப்படத்தின் கதாநாயகனான சந்தானத்தின் பெயர் கிருஷ்ணா. இவர் யூடியூபில் விமர்சனம் செய்வதில் வல்லவராக திகழ தனது பெயரை கிஸ்ஸா என மாற்றிக்கொண்டு பல படங்களை தாறுமாறாக பேசி பல லைக்குகளை அள்ளி வருவதுடன், படங்களை விமர்சனம் செய்து தயாரிப்பாளர்களின் சாபத்தையும் வாங்கிக் கொள்கிறார். இப்படிப்பட்ட சந்தானத்திற்கு பாடம் புகுட்ட நினைக்கும் செல்வராகவன்  சந்தானத்தை தியேட்டருக்கு வரவழைத்து படத்திற்குள் அனுப்பி என்ஜாய் பண்ணும் கதையாக இப்படம் உள்ளது. 

இப்படத்தில் சுவாரசியம் என்னவென்றால் திரைக்குள் சென்ற பின் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் கதாபாத்திரமும் அவர்களது கெட்டப்பும் மாறுவதுதான். அந்த வகையில் பார்த்தால் சந்தானத்தின் அப்பாவான நிழல் ரவி, நிஜ உலகத்தில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் திரைக்குள் கப்பலின் கேப்டனாக மாறுகிறார். அதேபோல் வீட்டில் ஹவுஸ் வைஃப் ஆக சந்தானத்தின் அம்மா கேரக்டரில் இருக்கும் கஸ்தூரி, திரைக்குள் சென்றவுடன் கவர்ச்சி திருடியாக மாறி அனைவரது கைதட்டலையும் பெற்றார்.

சந்தானத்துக்கு தங்கையாக வந்த யாஷிகா ஆனந்தை பார்த்த ரசிகர்கள், யாஷிகா ஆனந்தை போய் இப்படி அடக்க ஒடுக்கமாய் வைத்து விட்டாரே இயக்குனர் என்று சொல்லிக் கொண்டிருக்க திரைக்குள் சென்ற பின் யாஷிகா ஆனந்த் வழக்கம் போல ரசிகர்களை ஏமாற்றாமல் கவர்ச்சி கன்னியாக மாறி கௌதம் மேனனுக்கு ஜோடியாக தோன்றி ரசிகர்களுக்கு ஆத்ம திருப்தி கொடுத்தார். மேலும் இந்தக் கதையில் ட்விஸ்ட் என்று பார்த்தால் அது கதாநாயகியை வைத்து தான்.

இப்படி இருக்க, படத்தின் பிளஸ்கள் எனப் பார்த்தால் சீரியஸாக இருக்கும் சந்தானத்தின் பக்கபலமாக இருக்கும் மொட்டை ராஜேந்திரன் தான். அவரது காமெடிக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் கௌதமேனன் மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரது ஜோடி பொருத்தத்திற்கும் தியேட்டரில் இப்படி ஒரு பாராட்டு கிடைக்கும் என யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது அந்த அளவிற்கு இருவரது போஷனிலும் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

படத்தின் இசைகள் அல்டிமேட் ஆக இருப்பினும், அதே இசையையே வைத்து கலாய்த்தது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது. மேலும் படத்தின் ஆரம்பத்தில் கதையை நகர்த்த வேண்டுமே என்பதற்காக கொண்டு சென்றதைப் போல் இருந்தாலும் போகப்போக படத்தில் காமெடிகளை அள்ளி சிதற விட்டு, படத்தை பார்த்து வெளியே வருபவர்களை வயிறு பிடித்து கொண்டு வரும் அளவிற்கு சிரிக்க வைத்துள்ளது டிடி நெக்ஸ்ட் லெவல்.


 ஒரு வழியாக பல பாடுகளைக் கடந்து படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் மக்களின் சிரிப்புகளை பார்த்த பின்பு தான் தயாரிப்பாளரான ஆரியாவிற்கும் நடிகரான சந்தானத்திற்கும் இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சி இருந்தது அனைவரது கண்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது.

இதையும் படிங்க: ரூ.10 கோடியா?... பாட்டையே டெலிட் பண்ணிடுறோம்... சரண்டர் ஆன சந்தானம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share