என் புருஷன கலாய்ச்சா நீங்க என்ன பெரிய ஆளா..! சந்தானத்தை வறுத்தெடுத்த நடிகை தேவயானி..!
என் கணவரை கலாய்த்த சந்தானத்தை எனக்கு பிடிக்காது என பேசியுள்ளார் நடிகை தேவயானி.
"மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு" என்ற பாடலை இன்று கேட்டாலும் அனைவரது மனதிலும் உடனே நினைவுக்கு வருபவர் நடிகை தேவையானி. தேவயானி நடிப்பில் வந்த அனைத்து படங்களும் இன்றும் பார்க்க கூடிய அழகிய படங்களாகவே இருக்கும். அதிலும் தேவயானி நடிப்பில் வந்த சூர்யவம்சம் படத்தில் ஒரே பாடலில் கலைக்டர் ஆகி, பலரது மனதிலும் ஊக்கம் கொடுத்தவர்.
எப்பொழுதும் இவரை படத்தில், சேலையில் அல்லது சுடிதாரில் தான் பார்க்க முடியும். தமிழ் திரையுலகில் கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகை என்ற பெருமைக்கு சொந்தகாரர் தான் தேவயானி. இவர் படத்தில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் ஃபேமஸ் தான். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "கோலங்கள்" சீரியலில் நடித்து தனக்கான பெண்கள் ரசிகை பட்டாளங்களை உருவாக்கியவர்.
இப்படி அழகாக தமிழ் பேசும் தேவயானி, மும்பையில் பிறந்து வளர்ந்தவர். அதன்பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழி படங்களில் 90 மற்றும் 2000 காலகட்டத்தில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு, இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்தது கொண்டார். தேவையானி மற்றும் ராஜ்குமாரன் தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு அழகான பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இதையும் படிங்க: நமிதாவை எனக்கு பிடிக்க காரணம் அன்று நடந்த சம்பவம் தான்..! உண்மையை உடைத்த பாக்யராஜ்..!
இப்படி திரையுலகில் இன்றும் கலக்கி வரும் தேவயானி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், விவசாயி மகன், சூர்யவம்சம், நினைத்தேன் வந்தாய், நீ வருவாய் என, பாட்டாளி, தெனாலி, வல்லரசு, பாரதி, அப்பு, பிரெண்ட்ஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், அழகி, பஞ்சதந்திரம், நியூ, கிரி, ஐந்தாம் படை, ஸ்ட்ராபெரி, களவாணி மாப்பிளை, எழுமின், ஜீனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
மேலும், நடிகை தேவயானி நடித்துள்ள 'நிழற்குடை' படமானது மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான கே.பாக்கியராஜ், தேவயானி எப்பொழுது பார்த்தாலும் முகத்தில் அந்த அன்பை மட்டுமே வைத்துள்ளார். அது எப்படி என எனக்கும் புரியவில்லை, உண்மையிலேயே அவரது கணவர் கொடுத்து வைத்தவர் தான் இப்படி ஒரு அன்பான மனைவி கிடைக்க. அதுமட்டுமல்லாமல் தேவையானி நடித்துள்ள இந்த நிழற்குடை படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என நம்புகிறேன் என பேசி சென்றார்.
இப்படி இருக்கையில், தனது கணவரை குறித்தும் அவருடன் நடித்த சந்தானம் குறித்தும் காட்டமாக பேசி இருக்கிறார் தேவயானி. அவர் பேசுகையில், "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் எனது கணவரை காமெடி நடிகர் சந்தானம் மிகவும் மோசமாக கலாய்த்து இருப்பார். உண்மையில் சந்தானம் என் கணவரை கலாய்த்து இருந்ததை இன்றுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு அது பிடிக்கவும் இல்லை.
என் மனதில் நீங்காத கேள்வி என்றால் எனது கணவர் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று தான் எனக்கு இன்று வரை தெரியவில்லை. குறிப்பாக சந்தானம் படத்தில் என் கணவர் நடிக்கிறார் என்று படம் வெளியான பின்புதான் எனக்கு தெரியும். ஆனால் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று எனக்கு தெரியாது" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சூர்யாவின் சூன்யம்... 16 ஆண்டுகளாக அட்டர் ஃப்ளாப்... விபூதி அடிக்கும் பழைய டபரா செட்டுகள்..!