×
 

துல்கர் சல்மானை புகழ்ந்து தள்ளிய நடிகை கல்யாணி பிரியதர்ஷன்..! ‘லோகா’ படமே அவரால் தான் என பெருமிதம்..!

லோகா’ படமே அவரால் தான் என நடிகர் துல்கர் சல்மானை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் தனது 42வது பிறந்த நாளை ஜூலை 28 அன்று கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அவருடன் "வரனே அவஷ்யமுண்ட்" திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை கல்யாணி பிரியதர்ஷன், இந்தாண்டு பிறந்த நாளில் தனது வாழ்த்தை ஒரு புதிய முறையில் பதிவு செய்துள்ளார். துல்கருடன் தன்னுடைய நட்பு மற்றும் அவருடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அனுபவம் குறித்தும், தனது நெகிழ்ச்சியை அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அந்த நேர்காணலில் கல்யாணி பேசுகையில், " நடிகர் துல்கரின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் நிறைய எழுதி நீண்ட பதிவுகளை பதிவிட்டு வாழ்த்துத் தெரிவிப்பேன். இந்த பிறந்த நாளில் கொஞ்சம் ஸ்பெஷலாக, நான் நடிக்கும் ‘லோகா’ படத்தின் டீஸரைப் பகிர்ந்து வாழ்த்துச் சொல்கிறேன். இந்தப் படத்தை துல்கர் தான் தயாரிக்கிறார் என்பதும், அது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாக அமைந்திருப்பதும் மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கிறது.. அதுமட்டுமல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக எனக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும், முதலில் உதவ விரைந்து வருவது துல்கர் தான். என்னுடைய தனிப்பட்ட வாழ்விலும், தொழில்முறை முயற்சிகளிலும் அவர் எப்போதும் எனக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறார். நான் ஒருபோதும் தனியாக இருக்க வில்லை. அந்த உணர்வைத் துல்கரால் தான் உணர முடியாமல் இருக்கிறேன்.

நீங்கள் இல்லையென்றால், நான் இன்று இவ்வளவு தைரியமாக, நம்பிக்கையுடன் இருப்பேன் என்றே தெரியவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், துல்கர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வெபேரர் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கவுள்ள புதிய திரைப்படமான “லோகா” விரைவில் வெளியிடப்படவுள்ளது. இப்படம், துல்கர் உருவாக்கிய வெபேரர் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ‘லோகா’ திரைப்படத்தில், சமீபத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ப்ரேமலு’ திரைப்படத்தின் நடிகர் நஸ்லேன், கல்யாணி பிரியதர்ஷன், மற்றும் திறமையான நடிகர்கள் சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: பட்டைய கிளப்பும் நடிகர் தனுஷின் ‘டி54’..! பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் சூப்பர் ஹிட் படம்..!

இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக, துல்கர் சல்மான் மற்றும் மலையாள சினிமாவின் வேறு ஒரு முக்கிய நட்சத்திரமான டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கியமான கெஸ்ட் ரோல்களில் தோன்றவிருக்கின்றனர். திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் இருவரிடமிருந்தும், படத்தின் கதைக்களம், சினிமாடிக் விஷுவலேஷன் ஆகியவை தொடர்பாக எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. துல்கரின் தயாரிப்பு நிறுவனமான வெபேரர் பிலிம்ஸ் இதற்கு முன்னும் பல வெற்றிப்படங்களை வழங்கியுள்ளது. ஆனால், இந்த "லோகா" திரைப்படம் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் புதிய சினிமா பிரபஞ்சத்தின் தொடக்கமாக அமைவதால், இப்படம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானின் பிறந்த நாளையும், அவருடைய தயாரிப்பில் வெளிவரவிருக்கும் முக்கியமான திரைப்படத்தையும் முன்னிட்டு, மலையாள சினிமா ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அனைவரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கின்ற பலரும், "லோகா" திரைப்படம் மலையாள சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.

மேலும், துல்கர் சல்மானின் பங்களிப்பு, அவருடைய நடிப்பு திறமையும், தயாரிப்பாளராக வெளிப்படுத்தும் பார்வையும் எதிர்காலத்தில் மலையாள சினிமாவை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் எனத் திரையுலகம் நம்புகிறது.

இதையும் படிங்க: நடிப்பில் புதிய பரிமாணம்..! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 'மைசா' படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share