கவர்ச்சியா ட்ரெஸ் பண்ணா அந்த மாதிரியா.. முதல்ல உங்க புத்திய மாத்துங்க..! கோபத்தில் கொந்தளித்த நடிகை வேதிகா..!
நாங்க ட்ரெஸ் மாத்துறது இருக்கட்டும் முதல்ல உங்க புத்திய மாத்துங்க என நடிகை வேதிகா வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது அழகு, நடிப்பு மற்றும் பல திறமைகளால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வேதிகா. 'முனி', 'சக்கரகட்டி', 'காளை', 'பரதேசி', 'காவிய தலைவன்', 'காஞ்சனா-3', 'பேட்டாராப்' என பல படங்களில் மாறுமாறான கதாபாத்திரங்களில் நடித்தவர். வெண்ணை போல் பளிச்சென்ற தேகம், கியூட் முகம், அழகான கண்கள் என இவையெல்லாம் ரசிகர்களை கவர வைத்தாலும், அவரின் தைரியமான கருத்துகள் இன்று சமூகத்தில் பலருக்கும் கண் திறக்க வைக்கும் விதமாக உள்ளன.
சமீபத்தில் ஒரு பேட்டியில் வேதிகா கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி அவர் பேசுகையில், “நடிகை என்றாலே ஒரு பொதுவான எதிர்பார்ப்பு. கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படம் போட்டாலே போதும் – விமர்சனங்கள் மழை போல் பெய்யும். நம்மை விமர்சிப்பவர்கள், நம்மை உண்மையில் அறிந்தவர்கள் அல்ல. எப்படியாவது குறை கண்டுபிடிக்கவே விரும்புகிறார்கள்,” என தொடங்கும் அவர் பேச்சு, சமூக வலைதளங்களில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அவர் பேசுகையில் “நான் கூட சில சமயங்களில் பிகினி அணிகிறேன். அதைப் பார்த்து என்னை யார் என்ன சொல்ல வேண்டும்? என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நான் மட்டும் தான் உரிமையாளர். எனது உடலை எப்படி காட்ட வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் நம் சமூகத்தில், ஒரு பெண் சிறிது தைரியமாக நடந்தாள் போதும் – அவள் மீது அவதூறுகள் பாயும்,” என்றார் வேதிகா.
சிலர் நடிகைகள் அணியும் உடைகளை வைத்து அவர்களின் ‘தரத்தை’ மதிப்பீடு செய்கிறார்கள் என்பது வேதிகாவுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. “உடை என்பது ஒருவரது தேர்வு. அந்தத் தேர்வை வைத்து அவர்களை விமர்சிப்பது, அவர்கள் மேல் தனிப்பட்ட அபிப்பிராயங்களை கட்டியெழுப்புவது முற்றிலும் தவறு. ஒருவரது ஆளுமை, பழக்கவழக்கம், கல்வி, மரியாதை, எல்லாம் உடையைவிட மேலானவை. ஆனால் இவற்றைப் பார்க்காமல் உடையின் அடிப்படையில் பெண்களை மதிப்பீடு செய்வது பெரிய சீரழிவுக்கான அறிகுறி,” என்கிறார் அவர்.
இதையும் படிங்க: என்னை திருமணம் செய்ய விரும்புவது எல்லாம் சின்ன பசங்க தான்... நான் என்ன செய்ய..! நடிகை அமிஷா படேல் ஓபன் டாக்..!
நடிகைகள் என்பவர்கள் பொதுவில் வாழும் பிரபலங்கள் என்பதால், அவர்களின் ஒவ்வொரு செயலும் கூர்ந்த பார்வையில் நின்று விமர்சிக்கப்படுவது சாதாரணமாகி விட்டது. ஆனால் இது அவர்களின் தனிப்பட்ட உரிமைகளை மீறுகிறது என்பதையும் வேதிகா கூறியுள்ளார். அதன்படி பேசுகையில் “நடிகைகள் என்றும் மனிதர்கள்தான். நாமும் உங்களுக்கேற்ப வாழ்கிறோம். உங்களுக்கேற்ப சுவாசிக்கிறோம். எங்கள் மனநிலையையும் புரிந்துகொள்ளுங்கள். விமர்சிக்க முன்பே சிந்தியுங்கள்,” என எமோஷனல் ஆக பேசியிருக்கிறார். வேதிகாவின் இந்த கருத்துக்கள் சமூகவலைதளங்களில் பெரிய அளவில் ஆதரவை பெற்று வருகின்றன.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவரை ஆளுமைமிக்க பெண் என புகழ்ந்து வருகின்றனர். ஆகவே நடிகை வேதிகா இன்றைய சமூகத்தில் ஒரு முக்கியமான தொனியாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். தனது உடலையும், உரிமையையும் பற்றிய உறுதியுடன், விமர்சனங்களைத் தாண்டி பேசும் அவரது நிதானமான வார்த்தைகள் பலருக்குத் தெளிவு தரக்கூடியவை. பெண்கள் மட்டும் அல்ல, எல்லோருமே ஒருவரை அவர்கள் உடையின் அடிப்படையில் மதிப்பீடு செய்வதை நிறுத்த வேண்டிய நேரம் இது. “என்னுடைய உடை என்னுடைய தேர்வு. என்னை எனக்கு மட்டுமே பரிசோதிக்கத் தெரியும். உங்கள் பார்வை யாருக்கும் தடையாக இருக்கக்கூடாது” – எனும் அவர் வார்த்தைகள், நம் சமூகத்திற்கான முக்கியமான பயணத்தை தொடங்க வைத்திருக்கிறது.
எனவே நடிகை வேதிகா தனது உடை தேர்வுகள் குறித்து விமர்சனங்கள் வருவது குறித்து எதிர்வினை தெரிவித்துள்ளார். நடிகைகளை, அவர்கள் அணியும் உடையின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது தவறு எனவும், இது ஒரு சமூக நோயாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். சமூகத்தில் பெண்களுக்கு இடம் தரும் மாற்றத்தை தைரியமாக பேசும் வேதிகா போன்ற பிரபலங்கள் இன்னும் தேவைப்படுகின்றனர்.
இதையும் படிங்க: "அவதார்: தி வே ஆப் வாட்டர்" பார்க்க மிஸ் பண்ணிட்டீங்களா..! கவலைப்படாதீங்க மீண்டும் ரிலீசாக போகிறதாம்..!