×
 

கலக்கல் லுக்கில்.. சிகப்பு நிற ட்ரெஸில் நடிகை துஷாரா விஜயன்..! அழகான லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்..!

நடிகை துஷாரா விஜயனின் அழகான லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றன.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகைகளில் முக்கியமானவராக திகழ்ந்து வருகிறார் துஷாரா விஜயன்.


கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர், தற்போது தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்படும் இளம் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

திரையில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் துஷாரா விஜயன், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருவதால், அவரது ஒவ்வொரு பதிவும் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: படுக்கையில் மல்லிகை பூ.. அதோடு வெள்ளைநிற சேலையில் தேவதை போல் நடிகை திவ்ய பாரதி..!! சிலிர்க்க வைக்கும் அழகிய போட்டோஸ்..!

குறிப்பாக, இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் துஷாரா விஜயனின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

ஆர்யா கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில், குடும்ப பின்னணி கொண்ட வலுவான பெண் கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார்.

அவரது இயல்பான உடல்மொழி, உணர்வுப்பூர்வமான நடிப்பு மற்றும் திரைக்கதைக்கு ஏற்ற வெளிப்பாடு ஆகியவை ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன.

இந்த நிலையில், சமீபத்தில் துஷாரா விஜயன் நடித்த ‘Exam’ என்ற வெப் தொடர் வெளியாகி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கல்வி, போட்டி மற்றும் வாழ்க்கையின் பல்வேறு சவால்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடரில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இதையும் படிங்க: படத்தை இப்பவே பார்க்கணும் போல இருக்கே..!! ஜெயராம்.. ஊர்வசி நடிக்கும் “பரிமளா & கோ” பட புரோமோ ரிலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share