பிளாக் பஸ்டர் ஹிட்டான "கேங்கர்ஸ்"..! விறுவிறுப்பு குறையாமல் ரசிக்க வைத்த சுந்தர் சி-க்கு பாராட்டு..!
ட்ரெய்லரை விட படம் மாஸ் ஹிட்டாகி உள்ளது என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
தமிழ் திரைப்படங்களில் நடிகர் சுந்தர் சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு இருவரும் இணைந்து நடித்த படங்கள் ஏராளம். அந்த வகையில் இதுவரை இருவரும் வின்னர், லண்டன், கிரி, ரெண்டு, தலைநகரம், நகரம் மறுபக்கம் ஆகிய படங்கள் நடித்து படங்கள் ஹிட் கொடுத்தன இப்படி நீண்ட வருடங்களுக்கு பின் இவர்கள் இருவரின் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படமான 'கேங்கர்ஸ்' படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஸ்காந்த் ஆகியோருடன் நடிகர் வடிவேலும் நடித்துள்ளனர்.
இந்த படம் ஏப்ரல் 24ம் தேதியான என்று வெளியாகும் என கூறிய நிலையில் தற்பொழுது இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் கதை என பார்த்தால், படத்தின் ஆரம்பத்தில் ஒரு பள்ளி காண்பிக்கப்படுகிறது அந்த பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் கேத்ரின் தெரசா, இந்த பள்ளியில் இருந்து ஒரு மாணவி காணாமல் போனதை கண்டு பிடித்து, அதனை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.
மேலும், இந்த பள்ளியில் பல அவலநிலைகள் உள்ளது. ஒழுக்கத்திற்கு மாறாக நிறைய சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக கேத்ரின் சொல்ல, அதனை விசாரிக்க போலீஸ் தரப்பில் இருந்து ஒருவர் அந்த பள்ளியில் ஆசிரியராக சேர்கிறார்.
இதையும் படிங்க: 'அரண்மனை' குறித்து சுந்தர்.சி சொன்ன ரகசியம்..! வியப்பில் உறைந்து போனேன் - வடிவேலு மாஸ் ஸ்பீச்..!
அவர் தான் மறைமுக இன்வர்ஸ்டிகேஷன் ஆபிஸரான சுந்தர் சி, இவர் இந்த பள்ளியில் உள்ள அனைத்து குற்றங்களையும் கண்டு பிடிக்கிறார். மேலும் ஆக்ஷ்ன் மற்றும் சண்டை காட்சிகளில் பிச்சி ஒதறி இருக்கிறார். இப்படத்தின் வில்லனான பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான ஹரீஷ் பேரடி வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். அப்பொழுது சுந்தர் சி போலீஸ் இல்லை என்பதை கண்டுபிடித்த பின் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் சுந்தர் சி. எதிற்க்காக அவர் பள்ளிக்கு வந்தார், என்ன பிரச்சனை என்பதை அழகாக விவரித்தது படம்.
இவரை போலவே படத்தை கடைசி வரை விறுவிறுப்பாக கொண்டு சென்றவர் நடிகர் வடிவேலு, உண்மையில் இந்த படத்தில் பழைய வடிவேலுவை பார்க்க முடிந்தது. அவரது நடை உடை பாவனை அனைத்தும் மக்களை ஒரு நிமிடம் விடாமல் சிரிக்க வைத்தது. மேலும் வாணிபோஜன் சிறிது நேரமே திரையில் தோன்றினாலும் தனது அபார நடிப்பால் அனைவரையும் கண்கலங்க வைத்தார்.
இப்படி படம் ஆரம்பம் முதல் முடிவு வரை சிரிப்பு, காதல், அழுகை, எமோஷன், கிளாமர் என அனைத்தையும் வைத்து மிகுந்த கலவையாக கொடுத்துள்ளார் இயக்குனர். இந்த படத்திற்கு மேலும் அழகை சேர்த்தது கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவில் உருவான காட்சிகள் தான். இதனை தொடர்ந்து அனல் பறக்கும் சண்டை காட்சிகள். அதற்கு ஏற்றார் போல் சத்யாவின் இசை படத்துடன் மிரட்ட செய்கிறது.கிளாமரில் குறைவைக்காத நடன காட்சிகள் அனைத்தும் உண்மையில் இதுதான் சுந்தர் சி படம் என்பதை நிரூபித்து உள்ளார்.
இந்த படம் எப்படி ட்ரெய்லரில் பார்க்க ஆசையை தூண்டியதோ அதேபோல் திரையரங்கில் விறுவிறுப்பு குறையாமல் உள்ளது.
இதையும் படிங்க: வடிவேலுவை வியக்க வைத்த இயக்குனர்..! ராட்சசி ஸ்டைலில் 3 உதாரணம் கூறி அசத்திய சுந்தர் சி..!