நடிகை கூறிய ஒற்றை புகார்..! போதை மறுவாழ்வு மையத்தில் "GBU" பட வில்லன்..!
குட் பேட் அக்லி வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடிகர் ஷைன் டாம் சாக்கோ தன்னிடம் வந்து ஆடை மாற்ற உங்களுக்கு உதவி செய்யட்டுமா என கூறியதாகவும் படப்பிடிப்பு தளத்தில் அவர் போதை மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும் சமீபத்தில் நடிகை வின்சி அலோசியஸ் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியை தொடர்ந்து காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ இருக்கும் ரகசிய தகவல் அறிந்த போலீசார் அவரை தேடி அங்கு சென்ற பொழுது ஜன்னல் வழியாக தப்பி சென்றார்.
இப்படி இருக்க, கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு ஷைன் டாம் சாக்கோவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிரைவேற்றி இருந்தனர். அதை பற்றி விளக்கம் அளித்த கேரளா திரைப்பட கூட்டமைப்பின் பொருளாளர் உன்னி கிருஷ்ணன், முதலில் நடிகை வின்சி அலோசியஸ் நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீதான புகாரை கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பில் தான் கொடுத்தார். அவரிடம் சட்டத்தின்படி உள்புகார்கள் குழுவில் புகார் அளிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. இதனை அடுத்து, படப்பிடிப்பு தளத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவையும் அழைத்தோம். அப்பொழுது வந்த அவர் தான் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எங்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ஆதலால் அவரை படங்களில் நடிக்க தடைவிதிக்கிறோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காஷ்மீர் பிரச்சனையை இலங்கையுடன் ஒப்பிட்டு பேசிய இயக்குநர் த.செ.ஞானவேல்..!
இப்படி இருக்க, இவர்களது பிரச்சனைகளை விசாரித்து முடிவு செய்ய நினைத்த "உள் புகார் குழு" இருவரையும் நேரில் அழைத்தது. அப்போது நடிகை வின்சி அலோசியஸ் தனியாகவும், நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தினருடனும் வந்தார். அப்போது பேசிய டாம், "உண்மையில் நான் எந்த வித உள்நோக்கத்துடனும் அப்படி பேசவில்லை உங்களிடம் கேட்கவுமில்லை. நான் பேசும் பாணியே அப்படி தான். உங்களிடம் மட்டும் அல்ல நான் யாரிடம் பழகினாலும் உரிமை எடுத்து தான் பேசுவேன். இனிமேல் இப்படி எந்தவித தவறுகளும் நடக்காமல் பார்த்து கொள்கிறேன். மனதார எனது தவறுக்கு வருந்துகிறேன். மேலும் நடிகை வின்சி அலோசியஸிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்". என தனது மன்னிப்பை கேட்டு கொண்டு அங்கிருந்து சென்றார்.
இந்த சூழலில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவை தொடர்ந்து, ஸ்ரீநாத் பாசி மற்றும் நடிகை செளமியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் போதைக்கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆதலால் நடிகர் ஷைன் டாம் சாக்கோவை தொடுபுழாவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர் காவல்துறையினர். மீதமுள்ள இரண்டு பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இது அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடனே நடந்துள்ளது என்றும் அவரது சிகிச்சை முடியும் வரை போலீஸ் கண்காணிப்பில் இருப்பார் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஆதரவான சர்ச்சை பதிவு..! விளக்கம் கொடுத்து எஸ்கேப் ஆன விஜய் ஆண்டனி..!