எஸ்.கே கொடுத்த பிரமாண்ட பரிசு..! ஆச்சர்யத்தில் உறைந்த "குட் நைட்" பட இயக்குனர்..!
சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசால் குட் நைட் பட இயக்குனர் ஆச்சர்யத்தில் உறைந்து போனார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு செல்லும் சூழ்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அந்த வகையில், கிட்ஸ்கள் அனைவரையும் கவர்ந்தவர் என்றும் கோட் படத்தில் 'நான் போகிறேன் இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என நடிகர் விஜய்யிடம் வாழ்த்து பெற்று அடுத்தடுத்து முன்னேறி வரும் சிவகார்த்திகேயனின் ஆரம்ப வாழ்க்கை கஷ்டம் தான்.
ரூமில் படுக்க இடமில்லாமல், இரவு பகலாக தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஜோடி டான்ஸ், அது இது எது, விருது வழங்கும் விழா என அனைத்திலும் தொகுப்பாளராக இருந்து தன்னுடைய காமெடி திறமையாலும், நடிகர்களின் குரல்களை தன் வசப்படுத்தி, அதை தனக்குண்டான பாணியில் பேசி மக்கள் மனதில் தொகுப்பாளராக நீங்கா இடம் பிடித்தவர். சின்னத்திரையில் நீண்ட நாட்கள் ஆக தொகுப்பாளராக இருந்த இவருக்கு அடுத்த கட்ட பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது அட்லீ இயக்கத்தில் உருவான முகப்புத்தகம் என்ற குறும்படம், இதில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் சில விளம்பரங்களிலும் நடித்து, பின் 2012 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தில் நடித்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக தனது காலடியை பதித்தார்.
இதையும் படிங்க: ஒரே ஸ்டோரில இரண்டு மேட்டரு..! நடிகை ஸ்ருதி ஹாசன் பதிவால் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
அதன் பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரஜினி முருகன் என படிப்படியாக வெற்றி படங்களை கொடுத்து இன்று பராசக்தி, மதராஸி போன்ற பெரிய படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான "மதராஸி" திரைப்படத்திற்காக ஒரு கூட்டம் காத்திருக்க, இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சிவகார்த்திகேயன் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் வெளியீட்டுக்காகவும் ஒரு கூட்டம் காத்து கொண்டு உள்ளது.
இப்படி படத்தில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு வெளியே சுற்ற எங்கு நேரமிருக்கும் என மக்கள் நினைத்து கொண்டிருக்க, அதனை முறியடிக்கும் விதமாக தற்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, - மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இசையில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் ஆகியோர் நடிப்பில் 2023 மே 12ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் "குட் நைட்". இந்த படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். இவருடைய இயக்கத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 24-வது படத்தை நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், விநாயக் சந்திரசேகரனின் பிறந்த நாளுக்கு அல்டிமேட்டான பரிசை நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கிறார். இப்படி இருக்க, தற்பொழுது, சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் விநாயக், " பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் பரிசுக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா.
இந்த வருட பிறந்தநாளை உங்கள் சந்திப்பு மிகவும் சிறப்பாக்கியது. நன்றி" என தெரிவித்துள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: என்னடா இது ரஜினிபடத்துக்கு வந்த சோதனை..! "கூலி" படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு..!