நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்..! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!
உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் கவுண்டமணியின் மனைவி.
நடிகர் கவுண்டமணி திரையுலகில் காமெடிக்கு என பெயர் பெற்றவர். இவரது காமெடி டயலாக்குகள் இன்றும் மக்கள் மத்தியில் ஃபேமஸ். அவர் "அக்கா மகளே இந்து.. என பாடுவது, பெட்டர்மாஸ் லைட்டே தான் வேண்டுமா என கேட்பதும், ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கே என கேட்பது" எல்லாம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காமெடிகளாகவே உள்ளது. இவருக்கு சரியான துணை என்றால் அவர் தான் நடிகர் செந்தில். இவர்கள் இருவரும் சேர்ந்தால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது.
எப்படி கார்டுன்ங்களில் டாம் அன்ட் ஜெரி உள்ளதோ அதே போல் தான் இவர்கள் இருவரும். இப்படிப்பட்ட நடிகர் கவுண்டமணியின் உண்மையான பெயர் சுப்பிரமணியன் கருப்பையன். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் எனும் சிற்றூரில் பிறந்த சுப்ரமணியன் ஊர் நாடகங்களில் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவுண்டமணி என பெயர் பெற்று 1964-ஆம் ஆண்டு 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தில் கிடைத்த சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். பின்னர் படிப்படியாக முன்னேறி தமிழ் திரையில் பிரபல நகைச்சுவை கலைஞராக உருவெடுத்தார். இவரது பெயர் பட்டி தொட்டி எங்கும் பரவ ஆரம்பித்தது.
இதையும் படிங்க: கோமாளி ஷோவை கோபமான ஷோவாக மாற்றிய சௌந்தர்யா..! மணிமேகலையை வம்பிழுத்த ரக்ஷன்..!
இதுவரை நடிகர் கவுண்டமணி 750 படங்களில் நடித்துள்ளார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், நெஞ்சில் துணிவிருந்தால், நெற்றிக்கண், பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், நான் பாடும் பாடல், உதய கீதம், மருதாணி, இதய கோயில், மண்ணுக்கேத்த பொண்ணு, மிஸ்டர் பாரத்,கரகாட்டக்காரன், அன்பு கட்டளை, வேலை கிடைச்சுடுச்சு, பெரிய இடத்து பிள்ளை, சின்ன தம்பி, புது மனிதன், சேரன் பாண்டியன், என் ராசாவின் மனசிலே, பிரம்மா, ஆயுள் கைதி, சின்ன கவுண்டர், சிங்காரவேலன், தெற்கு தெரு மச்சான், தேவர் மகன், மன்னன், ஊர் மரியாதையை, பங்காளி, மகராசன், ஜென்டில்மேன்,
எஜமான், பொன்னுமணி, பேண்டு மாஸ்டர், ரசிகன், சாது, ஜெய் ஹிந்த், சேதுபதி I.P.S, நாட்டாமை, முறை மாப்பிள்ளை, முறை மாமன், முத்து குளிக்க வாரீயளா, பெரிய குடும்பம், கர்ணா, மேட்டுக்குடி, உள்ளதை அள்ளித்தா, இந்தியன், கோயம்பத்தூர் மாப்ளேபரம்பரை, ஜானகிராமன், நேசம், ரெட்டை ஜடை வயசு, தென்மாங்கு பாட்டுக்காரன், அவள் வருவாளா, காதலர் தினம், அழகர்சாமி, உனக்காக எல்லாம் உனக்காக, கண்ணன் வருவான், அழகான நாட்கள், சமுத்திரம், பரசுராம், சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இப்படி இருக்க, கவுண்டமணியின் மனைவி சாந்தி, அந்த காலத்திலேயே இவரை காதல் திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் 2 மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி, இன்று காலை 10:30 மணியளவில் சென்னையில் காலமானார். சாந்தியின் உடல் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு இன்று மாலை அல்லது நாளை காலை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கருப்பு நிற டிரான்ஸ்பிரண்ட் உடையில்.. சாக்ஷி அகர்வாலின் கிறங்கடிக்கும் கிளிக்ஸ்..!