'ஹாரி பாட்டர்' நடிகை எம்மா வாட்சனுக்கு ஷாக் கொடுத்த நீதிபதி..! ஃபேமஸாக இருப்பதால் இப்படி ஒரு தண்டனையாம்..!
'ஹாரி பாட்டர்' புகழ் நடிகையான எம்மா வாட்சன் ஃபேமஸாக இருப்பதால்அதிரடி உத்தரவு கொடுத்த நீதிபதி செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலகெங்கும் கோடான கோடி ரசிகர்களை பெற்று ஃபேமஸாக வலம் வரும் "ஹாரி பாட்டர்" திரைப்படத் தொடர் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் உலகளவில் மிகப்பெரிய புகழுடன் வளர்ந்தவர் தான் நடிகை எம்மா வாட்சன். ஹெர்மாயினி கிரேஞ்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், சிறு வயதிலேயே ஒட்டுமொத்த சினிமா உலகமும், ரசிகர்களும் இவரை தலைசிறந்த நடிகை லிஸ்டில் வைத்திருக்கின்றனர். தனது 10-வது வயதில் சினிமாவில் அறிமுகமான எம்மா, தொடர்ந்து ஹாலிவுட் மற்றும் பிரிட்டிஷ் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் திரையுலகில் இருந்து ப்ரேக் எடுத்துள்ளார். தற்போது, அவர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை படித்து வருகிறார்.
இந்த நேரத்தில், அவர் தொடர்பான சட்ட வழக்கு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, எம்மா வாட்சன் தனது தனிப்பட்ட காரில், ஆக்ஸ்போர்டு நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு சாலையில், அதற்குரிய வேக வரம்பை மீறி ஓட்டி சென்று இருக்கிறாராம். அந்த சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மெக்சிக்கன் ஸ்பீட் லிமிட் 48 கிலோமீட்டராக இருந்த நிலையில், அவர் அதனை மீறி 60 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டிச்சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக, அவர்மீது அந்நாட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில், இந்த வழக்கை இங்கிலாந்தின் ஓக்ஸ்ஃபோர்ட்ஷயர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், நீதிபதி எம்மா வாட்சனின் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, அவருக்கு, 6 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை, 100 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1 லட்சம் அபராதம், வழக்கின் நீதிமன்ற செலவுகளாக கூடுதலாக 40 பவுண்ட் செலுத்த வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ஆகவே நிதிமன்றத்தில் நீதிபதி பேசுகையில், "எம்மா வாட்சன் ஒரு பொது முன்னோடியாக இருப்பதால், போக்குவரத்து விதிகளை மீறுவதற்கான சின்ன தவறு கூட பொதுமக்களுக்கு தவறான எடுத்துக்காட்டாக இருக்கக்கூடும். அதனால், இந்த மாதிரியான செயல்களுக்கு உரிய பதிலைச் சொல்லவேண்டிய கட்டாயம் நீதிமன்றத்துக்கு உண்டு" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உருவக்கேலி செய்தவர்களுக்கு நடிகை நிவேதா தாமஸின் 'தக்' பதிலடி..! விமர்சனங்களுக்கு ஃபுல்ஸ்டாப்..!
இந்த விவகாரம் தற்பொழுது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிரபலமான, சமூக பொறுப்புடன் செயல்படும் நடிகையான எம்மா வாட்சனுக்கு எதிராகவே இப்படி ஒரு தீர்ப்பு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நீதிமன்றம் எடுத்த முடிவு, பொதுமக்களும் மற்றும் பிரபலங்களும் சமம் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சிறு தவறு என்றாலும், பிரபலமான மனிதராக மட்டுமல்லாமல் பொது முன்மாதிரியாக இருப்பவர்களின் செயல்களில் விதிமுறைகளை மீறும் அனுபவங்கள் சமூகத்துக்கு தவறான அடிப்படிகளை உருவாக்கக்கூடும் என்பதை இந்த வழக்கு எச்சரிக்கையாகவே முன்னிறுத்துகிறது.
இதற்கு எம்மா வாட்சன் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித தனிப்பட்ட பதிலும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவர் சட்டத்தின் முடிவை மதித்து செயல்படுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அட்ஜஸ்ட்மென்ட் விவகாரத்தில் வெளிப்படையாக பேசிய நடிகை பவானிஸ்ரீ..! அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்..!