‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
நடிகை சுபிக்ஷா சேலையில் கலக்கும் அழகிய போட்டோஸ் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வெப் தொடர்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இளம் தலைமுறையினரை கவரும் வகையில் காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் மருத்துவப் பின்னணி என பல்வேறு கதைக்களங்களில் உருவாகும் தொடர்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற தொடராக இருந்து வருவது ‘ஹார்ட் பீட்’.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் முக்கிய அப்டேட்.!! இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு.. ரிலீஸ் தேதியிலும் மாற்றமா.!
தற்போது இந்த வெப் தொடரின் 3-வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தொடரில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் குறித்தும் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ‘ஹார்ட் பீட்’ தொடரில் அமலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சுபிக்ஷா தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளார்.
காரணம், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள்தான்.
சுபிக்ஷா சின்னத்திரை ரசிகர்களுக்கு புதுமுகம் கிடையாது. இதற்கு முன்பே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வீரா’ சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.
சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை உருவாக்கிய சுபிக்ஷா, பின்னர் வெப் தொடரிலும் தனது பயணத்தை தொடர்ந்தார்.
இதையும் படிங்க: அவளும் நானும் லெஸ்பியன்..!! பெண் தோழியுடன் மெளனி ராய்.. தனது விருப்பம் குறித்து ஓபனாக சொல்லிட்டாரே..!