×
 

பட வாய்ப்பு வேணும்னா கிளாமர் லுக்ல மாறனுமாமே.. ஸ்ருஷ்டி டாங்கே 'நச்' கிளிக்..!

பட வாய்ப்பு குறைய குறைய ஸ்ருஷ்டி டாங்கேவின் கிளாமர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கன்னத்தில் அழகான குழியுடன் வெகுளித்தனமாக இருக்கும் ஸ்ருஷ்டியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அதிலும் ஸ்ருஷ்டியின் சிரிப்பு தான் ஸ்பெஷல், சிரிக்க ஆரம்பித்தால் அரை மணி நேரம் விடாமல் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைப்பார். 

இதையும் படிங்க: என்ன ட்ரெஸ் மா இது..! ஊரே உங்களை பார்க்க இப்படி ஒரு உடை போடனுமா..!

அதே சமயம், இவரை குறித்து நினைவு கூறுபவர்களின் காதுகளுக்கு முதலில் ஒலிக்கப்படும் பாடல் "அன்பே அன்பே என் கண்ணில்" என்ற பாடல் தான்.

இந்த பாடலில் ஜிவி பிரகாஷுடன் அருமையாக நடித்திருப்பார். இந்த பாடலுக்கு பின் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார் ஸ்ருஷ்டி டாங்கே.

மும்பையை பூர்விகமாக கொண்ட ஸ்ருஷ்டி, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ரசிர்களை உருவாக்கினார்.

இப்படி, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கேவின் முதல் படம் என்றால் அது 2010 ஆம் ஆண்டு வெளியான 'யாதுமாகி' என்ற படம் தான்.

இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ருஷ்டி.

இதனை அடுத்து பழைய பாடல்களை ட்ரெண்டாக்கும் பட வரிசைகளில் வந்த அற்புதமான படம் தான் 'புத்தம் புது காலை' இந்த திரைப்படத்தில் நடித்த ஸ்ருஷ்டியை தங்களது கனவு நாயகியாக ஏற்றுக்கொண்ட பலகோடி ரசிகர்களுக்காக, சிறிய கதாபாத்திரம் முதல் பெரிய கதாபாத்திரம் வரை உள்ள அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை ஸ்ருஷ்டி.

அதன் பின், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த 'மேகா' திரைப்படத்தில் நடித்து பல கலவையான விமர்சனங்கள் பெற்ற இவர் டார்லிங்,

எனக்குள் ஒருவன், நேருக்கு நேர் மற்றும் கத்துக்குட்டி உட்பட பல திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இன்னும் பல பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தும் வருகிறது.

இப்படி இருக்க, ஸ்ருஷ்டியை எங்கு பார்த்தாலும் அழகான ஹோம்லி பெண்ணாக மட்டுமே பார்க்க முடியும், அந்த அளவிற்கு தற்பொழுது வரை குடும்ப பாங்கான பெண்ணாவே அனைவரது மனதிலும் இருந்தவர் இன்று ஒரே உடையில் அனைவரது நம்பிக்கையையும் உடைத்து விட்டார் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ருஷ்டி சமீபத்தில் திடீரென கிளாமர் லுக்கில் மாறி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த சூழலில் தற்பொழுது அவருடைய புகைப்படம் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதையும் படிங்க: என்ன ட்ரெஸ் மா இது..! ஊரே உங்களை பார்க்க இப்படி ஒரு உடை போடனுமா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share