×
 

சூப்பர் ஸ்டாருடன் நடிச்சிட்டு இது கூட பண்ணலைனா எப்படி..! துஷாரா விஜயன் லுக்லைக் போட்டோஸ்..!

துஷாரா விஜயன் லுக்லைக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

தமிழ் திரையுலகில் தற்பொழுது சிறந்த நடிகையாக வளம் வருபவர் தான் துஷாரா விஜயன். இன்றைய காலகட்டத்தில் வரும் அனைத்து திரைப்படங்களிலும் இவரது கதாபாத்திரம் இல்லாமல் இருக்கவே முடியாது அந்த அளவிற்கு இவருடைய நடிப்பு அனைத்து இயக்குனர்களின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.  

தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுட்டு "பேஷன்" படிப்பை முடித்த துஷாரா விஜயன், படிப்படியாக திரையுலகில் நுழைந்து தனது திறமையை வெளிக்காட்டி, 2019 ஆம் ஆண்டு "போதை ஏறி புத்தி மாறி", என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர்.

இதையும் படிங்க: வெண்பனி மலரே... தங்க நகைகளுடன் தகதகவென மின்னும் லாஸ்லியா!

இதில் இவரது நடிப்பின் திறமையை பார்த்த இயக்குநர்கள் அடுத்ததாக 2021 ஆம் ஆண்டில் வெளியான ஆர்யாவின் "சார்பட்டா பரம்பரை" திரைப்படத்தில் அவரின் துணை நாயகியாக துஷாராவை நியமித்து படத்தை இயக்கினார். இந்தப் படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. 

இதனைத் தொடர்ந்து, 2022-ல் "நட்சத்திரம் நகர்கிறது"என்ற திரைப்படத்திலும், பின் 2024-ல் தனுஷுக்கு தங்கையாக "ராயன்" திரைப்படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மீண்டும் அதே 2024-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் "வேட்டையன்" திரைப்படத்தில் நடித்து ஸ்டார் நடிகைகளின் வரிசையில் ஒருவரானார்.

இப்படி துஷாரா இன்று பல படங்களில் நடித்தாலும், இவரை முதலில் நம்பி தேர்ந்தெடுத்தது இயக்குனர் பா.ரஞ்சித் தான். துஷாராவின் புகைப்படத்தை பார்த்து தேர்ந்தெடுத்த பா.ரஞ்சித், அவரது நடிப்பை பார்த்து முதலில் நம்பிக்கை வரவில்லையாம். படத்திற்காக அவரது உழைப்பை பார்த்த பின்னர் தான் நடிக்க வைத்தாராம். 

இப்படி தனது உழைப்பால் உயர்ந்து உள்ள துஷாரா விஜயனுக்கு, 2023 ஆம் ஆண்டு 'தமிழ் நட்சத்திர விருதுகளில் சிறந்த நடிகைக்கான நட்சத்திர விருது' கிடைத்தது.

மேலும் ஓடிடி பிளே விருதுகள் 2022ல் 'வளர்ந்து வரும் ஓடிடி நட்சத்திர பெண்' என்ற சிறந்த விருதும் கிடைத்தது.


தற்பொழுது நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார் துஷாரா விஜயன். 

இந்த நிலையில், இவரது கலக்கல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மேகசீனுக்காக கவர்ச்சியில் கடைவிரித்த அட்லீ பட ஹீரோயின்! வாமிக்கா கபியின் வைரல் போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share