×
 

சினிமா துறையில் இப்படி ஒரு அவலமா..! வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளப்பட்ட ஹீரோயின்கள்..பிரபல நடிகை அதிரடி கைது..!

நடிகைகளை வைத்து விபசாரம் நடத்திய இந்தி நடிகையை அதிரடியாக கைது செய்துள்ளனர் காவல் துறையினர்.

திரையுலகைத் தாண்டி, தொழில்நுட்பங்களுடன் கூடிய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிற சிலர், ரசிகர்களிடமும் மக்களிடமும் பெரும் அதிர்ச்சி, வெறுப்பு, ஆகியவற்றை ஏற்படுத்துகின்றனர். இந்த வரிசையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் என்னவெனில்  நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள ஹிந்தி நடிகை அனுஷ்கா மோனி மோகன் தாஸ், திரையுலகில் மூன் தாஸ் என்ற பெயரில் அறியப்படுபவர்.

இந்த சூழலில் மும்பையை அடுத்த தானே மாவட்டத்தில் உள்ள காஷிமிரா பகுதியில், ஒர் ஆடம்பர மாலில், தமிழும், தெலுங்கும், பெங்காலியும் பேசக்கூடிய டீவி மற்றும் சினிமா நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தப்பட்டு வந்தது குறித்த ரகசிய தகவல் மிரா-பயந்தர் காவல் துறைக்கு வந்தது. உடனே, உதவிக்கமிஷனர் மதன் பல்லால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் போது அங்கு முன்னாள் மாடல் அழகியும், பல பிராந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ள மூன் தாஸ் என்கிற அனுஷ்கா மோனி மோகன் தாஸ் இந்த ஒழுங்கற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலிசார் அவர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டம் ஒன்றை வகுத்தனர். ஒருவரை போலி வாடிக்கையாளராக மாற்றி, மூன் தாஸை தொடர்பு கொண்டு, நடிகைகள் குறித்து விசாரித்தனர். அதன்படி தாஸ், மும்பை–ஆமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள மிரா ரோடு பகுதியில் உள்ள ஒரு மாலில் நேரில் சந்திக்க அழைத்தார். அந்த இடத்திற்கு சென்ற போலி வாடிக்கையாளரிடம், "நடிகைகள் கிடைக்கும்... ஆனால் பணம் வேண்டும்" என கூறி, பணம் வாங்கும் நேரத்தில், மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்த போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 41 வயதான மூன் தாஸ் (அனுஷ்கா மோனி மோகன் தாஸ்) விசாரணையின் போது பல அதிர்ச்சிகர தகவல்களை ஒப்புக் கொண்டுள்ளார். குறிப்பாக, அவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் ஹிந்தி டீவி நடிகைகளிடம் தொடர்பு கொண்டு, அவர்களை "ஏஜென்ஸி வாயிலாக சிறப்பு வாய்ப்புகள்" என்ற பெயரில் செல்வந்தர்களிடம் வாடகைக்கு அனுப்பியதாக தெரியவந்துள்ளது. அந்த நடிகைகள் மீது அவர் விதித்த கட்டுப்பாடுகள், ஒப்பந்தங்கள் போன்றவை அனைத்தும் சட்டவிரோதமான விதத்தில் அமைந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில், நடிகைகள் விருப்பமின்றி இந்த சூழல்களில் தள்ளப்பட்டதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இப்படி இருக்க போலிசாரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் போது, இரண்டு நடிகைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பெங்காலி சினிமாவில், மற்றொருவர் டீ.வி. சீரியல்களில் நடித்த அனுபவம் கொண்டவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் விரைவில் சமூக நல அமைப்புகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் போலிசார் இதை "குற்ற வழிகளில் தொழில் செய்பவர்களை மட்டுமல்ல, துஷ்பிரயோகப்படும் பெண்களையும் காப்பாற்றும் முயற்சி" என கூறியுள்ளனர். இந்தச் சம்பவம், திரையுலகத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் பத்திரிகை முகப்புகளில் தோன்றிய நடிகைகள், பின்னர் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை பலரும் வாடலுடன் பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒருவேளை அஜித் fan-ஆ இருப்பாரோ பகத் பாசில்...! சினிமா வட்டார கவனத்தை ஈர்க்கும் வகையில் வாங்கிய காஸ்லி கார்..!

அத்துடன் வியாபார நோக்கத்தில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதற்கான வழக்குகள்
மனிதர்களை விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள், திட்டமிடப்பட்ட குற்றப்பெயர்கள் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன் தாஸ் என்ற பெயரில் சினிமா உலகில் அறியப்பட்ட அனுஷ்கா மோனி மோகன் தாஸ், 2000-களில் பல குறும்படங்கள், பிரபல பாடல்களிலும் நடித்துள்ளார். பின் பெங்காலி சினிமா, மற்றும் சில இரண்டாம் நிலை ஹிந்தி படங்களில் தோன்றியுள்ள இவர், திடீரென திரையுலகில் இருந்து ஒதுங்கியதாகத் தெரிய வந்தது. அதன்பின், விளம்பரங்கள் மற்றும் மாடலிங் வாய்ப்புகள் இல்லாத சூழலில், தனி ஏஜென்சி அமைத்து, கலைஞர்களை குற்றவழிகளில் தள்ளும் பாணியில் பணியாற்றியுள்ளார் என போலீசார் கூறுகின்றனர். இந்த செய்தி வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் நடிகை மூன் தாஸை பற்றிய புகைப்படங்கள், பழைய வீடியோக்கள் மற்றும் சினிமா காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. "திரைச்சீலைக்கு பின்னால் மறைந்திருக்கும் இருட்டு உலகம்" என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் மூலம், காவல்துறை முக்கிய எச்சரிக்கையை அளித்துள்ளது. அதில் “தொழில் வாய்ப்புகள், சினிமா வாய்ப்புகள் என்ற பெயரில் நடக்கும் ஏமாற்றுப் புகார்களுக்கு உடனடியாக முறையான வழிகாட்டும் அமைப்புகளில் புகார் அளிக்க வேண்டும். எந்த சூழலிலும் சட்டவிரோதமான அழைப்புகளில் ஈடுபடக்கூடாது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே திரையுலகிற்குள் நுழையும் கனவுகளை கொண்ட பல இளம் பெண்கள், இந்த மாதிரியான தாக்குதல்களுக்கு உள்ளாகும் போது, அவர்களை மீட்பது சமுதாயத்தின் பொறுப்பாகிறது. எனவே மூன் தாஸ் – ஒரு நடிகை, மாடல், தற்போது ஒரு குற்றவாளி என்ற நிலைக்கு வந்தது மிகுந்த சோகமான நிகழ்வாகும்.
சினிமா உலகில் இதுபோன்ற இருண்ட பக்கங்கள் ஒளிர வேண்டுமெனில், இளைய சமூகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Lokah படத்தில் இரத்தம் குடிக்கும் காட்டேரியாக மாறிய நான்..! அப்பா சொன்ன அந்த வார்த்தை - நடிகை கல்யாணி ஓபன் டாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share