×
 

நடிகர் ஜாக்கி சான் வீட்டில் சொத்து பிரச்சனையா..! ஏழைகளுக்கு ரூ.3000 கோடி சொத்தை கொடுத்ததால் மகனின் விபரீத செயல்..!

ஏழைகளுக்கு ரூ.3000 கோடி சொத்தை கொடுத்ததால் ஜாக்கியின் மகன் செய்த செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

90ஸ் கிட்ஸ்கள் குழந்தை பருவத்துலயே ஹீரோன்னா யாரென்று சொல்லணும்னா, அது ஒரே ஒருத்தர் அவர் தான் ஜாக்கி சான். “போலீஸ் ஸ்டோரி”, “டிரங்கன் மாஸ்டர்”, “ரஷ் ஹவர்” மாதிரி படங்கள்ல ஸ்டண்ட் அடிச்சா அது சீனிமா இல்லை, உண்மையிலேயே அவர் தானே பாயுறார்னு ரசிகர்கள் நம்புற அளவுக்கு, அவர் ஸ்க்ரீன்லக் காட்டிய அதிரடி இன்னும் யாராலும் மீற முடியாதது. புரூஸ் லீக்குப் பிறகு ஆக்சன்ல உலகம் முழுக்க பேரெடுத்த ஸ்டார் என்றால் அது ஜாக்கி சான்தான்.

சமீபத்துல அவர் நடித்த “கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்” ரிலீஸ் ஆனதும், ரசிகர்களின் ஓல்ட் மெமரீஸ் எல்லாம் கிளம்பி ஜாக்கி சான் மீண்டும் ட்ரெண்ட் ஆயிட்டார். ஆனால் அதைவிட செம்ம ட்ரெண்ட் பண்ணியது இன்னொரு செய்திதான் — அதுவும் ரொம்பவே ஹார்ட்-டச்சிங். உலகம் சுற்றிப் பல வருடங்களாக ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் பண்ணி, எலும்பு உடைந்து போயும் உழைச்சு சம்பாதிச்ச ரூ.3,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஜாக்கி சான்  ஃபுல்லா நன்கொடையாக கொடுத்து விட்டாராம். ஏழை மாணவர்கள் படிப்பதுக்கும், இயற்கை பேரிடர்கள் நேர்ல உதவிக்காகவும், அதேபோல சமூக நலத்துக்காகவும் அவர் நடத்துற Jackie Chan Charitable Foundation–க்கு எல்லாம் டொனேட் பண்ணிட்டாராம். ரூ.3,000 கோடி.. இந்த நியூஸ் வெளியாகிறத்துக்கே உலகம் முழுக்க பாராட்டுகள் பொழிய ஆரம்பிச்சிடுச்சு. “இவங்க தான் ரியல் லெஜண்ட்”, “எதுக்கு உலகம் இவரை ரெஸ்பெக்ட் பன்னுது என இப்ப தான் புரிது”ன்னு நெட்டிசன்ஸ் எல்லாம் ரெஸ்பெக்ட் ரெய்ன் பண்ணிட்டு இருந்தாங்க.

ஆனா இதுல இன்னொரு ட்விஸ்ட் இருந்தது. ஜாக்கி சான் சொல்றாராம், “என்னுடைய ரூ 3,000 கோடியையும் நன்கொடையா கொடுக்கிறேன். இதைப் பற்றி என் மகன் ஜேசி சானிடம் ‘உனக்கு வருத்தமில்லையா?’ன்னு கேட்டேன்.” அதுக்கு ஜேசி கொடுத்த ரிப்ளை உலகத்தையே மயக்கியிருச்சு. அவர் சொன்னாராம்,“நீங்கள் உழைத்து சம்பாதித்த செல்வத்தை நான் வாரிசு என்பதற்காகப் பெற்றுக்கணும்னு அவசியமில்லை.. அது எனக்கு பிடிக்காது. நானும் திறமைசாலி, நானும் உழைச்சு சம்பாதிக்கிறேன். பிறர் சம்பாதிச்ச பணத்துல வாழ்வதற்கு அர்த்தமே கிடையாது” என்றாராம். எப்படியோ அப்பாவையே மிஞ்சிற மாதிரி இந்த வார்த்தைகள் இருந்தது. இதைக்கேட்ட ஜாக்கி சானே பெருமையா நெகிழ்ந்திடுறாராம்.

இதையும் படிங்க: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுடிதாரில் அழகிய போட்டோ கிளிக்ஸ்..!

இப்போ உலகமெங்கும் ரசிகர்கள் இவர்களை பத்தி தான் பேசிட்டு இருக்கிறாங்க. ஜாக்கி சான் தனது வாழ்க்கையை ஸ்டண்ட் கலைக்கே அர்ப்பணிச்சவர். உயிரையும் ரிஸ்க் பண்ணி சம்பாதிச்ச செல்வத்தைத் தன்னிடம் வைத்துக்கொள்ளாம, சமுதாயத்துக்கே கொடுத்திருப்பது — இது சினிமாவுக்கு அப்பாற்பட்ட மனிதநேய செயல். அவரோட மகன் ஜேசியின் மனசும் அதே அளவு மெருகானது. அப்பா நன்கொடை கொடுத்ததுக்கு மகனே சப்போர்ட் பண்ணி, “எனது வாழ்க்கை நான் உழைப்பால் கட்டுவேன்” என்று நேராகச் சொல்லியிருப்பது உலகம் முழுக்க ரொம்பப்பெரிய ரெஸ்பெக்ட் வாங்கிட்டது. இதெல்லாம் சேர்ந்து பார்த்தா, ஜாக்கி சான் – ரியல் லைஃப் ஹீரோ.

ஜேசி சான் – ரியல் லைஃப் ரோல் மாடல். இருவரையும் பார்த்து மக்கள் சொல்றாங்க, “லெஜண்ட் பிளஸ் லெஜண்ட் = ஜாக்கி சான் குடும்பம்”.. அப்பாவுக்கு இதை விட வேற என்ன பெருமை வேண்டும் என சொல்லும் அளவிற்கு புல்லரிக்க செஞ்சிட்டாங்கையா.

இதையும் படிங்க: சிவப்பு நிற கிளாமர் உடையில் கலக்கும் நடிகை மீனாட்சி சௌத்ரி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share