கழுத்தில் பாம்பு.. தென்னை மரத்தில் சாகசம்..! நடிப்புன்னு வந்துட்டா மாஸ் காட்டுவேன் - நடிகை ரிமா கல்லிங்கல் பளிச் பேச்சு..!
நடிகை ரிமா கல்லிங்கல் நடிப்புன்னு வந்துட்டா மாஸ் காட்டுவேன் என வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
மலையாள சினிமாவில் தன்னுடைய தனித்துவமான கதையமைப்புகள், வித்தியாசமான வேடத்தேர்வுகள், மற்றும் சமூகக் கண்ணோட்டங்களால் தனக்கென ஒரு தனி அடையாளம் உருவாக்கியவர் நடிகை ரிமா கல்லிங்கல். ‘ரிடம்ஷன்’, ‘22 ஃபிமேல் கோட்டயம்’, ‘ஆர்யா’, ‘ராணி பத்மினி’ போன்ற படங்களில் ஆளுமை மிக்க வேடங்களில் நடித்துள்ள இவர், தற்போது தனது புதிய திரைப்படமான ‘தி மித் ஆப் ரியாலிட்டி’ மூலம் திரை உலகிற்குள் ஒரு புதிய யாத்திரையை தொடங்கி இருகிறார்.
இந்த படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படம் குறித்த ஒரு பத்திரிகை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ரிமா கல்லிங்கல் ஒரு தென்னை மரத்தில் ஏறி கொண்டிருப்பது போல் காணப்படுகிறது. இதனை மையமாகக் கொண்டு சமூக ஊடகங்களில் வலுக்கும் விமர்சனங்கள், மீம்ஸ்கள், மற்றும் விமர்சனக் கிண்டல்கள், திரையுலக ரசிகர்களிடையே ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது. ‘தி மித் ஆப் ரியாலிட்டி’ திரைப்படத்தின் கதையைப் பற்றிக் கேட்டபோது, ரிமா பேசுகையில், “இந்த படத்தில் நான் ஒரு தனியாக தீவிலே வசிக்கும் பெண்ணாக நடித்துள்ளேன். அவள் தனிமையில் வாழ்வதுடன், தீவிலுள்ள எல்லா வேலைகளையும் தானே செய்வாள். இது ஒரு பெண்ணின் சுயநிலை, தன்னம்பிக்கை, மற்றும் வாழ்க்கையை தானாக சந்திக்கக் கூடிய மனப்பான்மையை எடுத்துரைக்கும் கதை. இந்த கதையை கேட்டவுடன் எனக்கு மிகுந்த பிடிப்பு ஏற்பட்டது.” என்றார்.
அந்த கேரக்டர் நிஜமாகவே பல உள்மன அனுபவங்களை வெளிப்படுத்த வேண்டியதாக இருந்ததாகவும், ஒருபக்கமாக சிக்ஸ்பேக் ஹீரோக்கள் இல்லாத, வேறு கோணத்தில் உருவாக்கப்பட்ட கதையென்றும் ரிமா பகிர்ந்துகொண்டார். இப்படி இருக்க படத்தில் மிகவும் கஷ்டமான காட்சிகளில் நடித்ததைக் கூறும் ரிமா, தன்னுடைய உடல் சக்தி, பயிற்சி மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலமாக அத்தனை காட்சிகளையும் பிரமாதமாக முடித்ததாகக் கூறுகிறார். அதன்படி “படத்துக்காக தென்னை மரம் ஏற கற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும், ஒரு சிக்ஸ் பேக் உடைய பயன் எனக்கு பயிற்சி அளித்தார். அவர் வழிகாட்டியதின் மூலம், பல நாட்கள் பயிற்சி எடுத்தபின் நான் அதில் நல்ல திறமை பெற்றுவிட்டேன். உண்மையிலேயே, தென்னை மரம் ஏறுவது எனக்கு ஒரு ஜாலியான அனுபவமாக அமைந்தது.” என்றார்.
இதையும் படிங்க: இடம் என்னுடையது... காசு ஸ்ரீதேவி-யின் மகள்களுடையதா..! சாமானிய பெண் வழக்கில் ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!
இந்த புகைப்படம் வெளியாகியதுடன், சில சமூக வலைதளங்களில் வாய்ச்சொற்கள், கேலி, மற்றும் பெண் உழைப்பை இழிவுபடுத்தும் விதமாக விமர்சனங்கள் பரவத் தொடங்கியது. இப்படி பட்ட தென்னை மரத்தில் ஏறியதிலேயே சரிவராமல், மேலும் சில அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளையும் ரிமா இந்தப் படத்திற்காக செய்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் “ஒரு காட்சிக்காக விமானத்திலிருந்து குதிக்க வேண்டிய நிலை இருந்தது. அது மிகவும் அபாயகரமானது. ஆனால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பூரணமாய் இருந்தன. அதேபோல, ஒரு காட்சியில் எனது கழுத்தில் பாம்பை வைத்து நடித்தேன். அது உண்மையிலேயே ஒரு அசாதாரணமான அனுபவம். ஆனால் எனக்கு இப்படிப் பயமுறுத்தும் கேரக்டர்கள் தான் பிடிக்கும்,” என அவர் கூறுகிறார். ரிமா தொடர்ந்து, “ஒரு ஆண்சாதாரண நடிகன் அதே தென்னை மரத்திலே ஏறி இருந்தால், ‘மாஸ் ஹீரோ’ என்று சமூக வலைதளங்கள் புகழ்ந்திருக்கும்.
ஆனால் ஒரு பெண் அதையே செய்துவிட்டால், கேலி, கிண்டல், ட்ரோல். இது தான் சமூகத்தின் இரட்டை நிலை. இதைக் கண்டிப்பாக மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.” என்றார். அவரது இந்த முடிவெடுப்புகள், தைரியம், மற்றும் நேர்மை பேசுபவையாக அவர் பத்திரிகையாளர்களுக்கு மிளிர்ந்தார். மேலும் ‘தி மித் ஆப் ரியாலிட்டி’ என்ற படம் ஒரு ஆதிகாலத் தனிமையைப் பிரதிபலிக்கும் தத்துவப் படம் என்றும், இதில் திகிலும், உணர்வுகளும், சமூக விமர்சனமும் கலந்து அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் தொடர்ந்து புதிய பரிமாணங்களை தேடி, துணியுடன் சாயம் இல்லாமல் நடிக்கத் துணியும் நடிகைகள் குறைவானவையெனின், ரிமா கல்லிங்கல் அவர்களில் முதன்மையானவர். திரைப்படத்திற்காக தனது உடலையும், உணர்வுகளையும் முழுமையாக இணைத்து, நடிகையாக தனது வரம்புகளை சோதித்து வரும் ஒரு போராளி.
ஆகவே தான் தென்னை மரத்தில் ஏறி, பாம்புடன் நடித்த காட்சிகளால் சர்ச்சைக்குள்ளான ரிமா, இப்போது அந்த விமர்சனங்களையே தனது படத்துக்கான விளம்பரக் கருவியாக மாற்றியுள்ளார். ஒரு பெண் எந்த அளவிற்கு சவால்களை எதிர்கொண்டு தனது கலைக்காக போராடுகிறாளோ, அதே அளவிற்கு சமூகத்தின் கருத்துக்கள் அவளைக் குறைத்துவைக்க முயற்சிக்கின்றன. ஆனால் ரிமா கல்லிங்கல் போல் தன்னை நம்பும், “சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அப்பால்” வாழ நினைக்கும் நடிகைகள், இந்தத் துறையில் மட்டும் இல்லாமல், புதுப் பாதைகளை உருவாக்கி விடுகின்றனர்.
இது போன்ற நடிப்பும், தயாரிப்பும், பார்வைகளும் அதிகரித்தால் தான் சினிமா, சமூக உணர்வு, மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் ஒரே நேரத்தில் மேம்படும்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு குடும்பத்துடன் தியேட்டரில் "டீசல்" போட ரெடியா..! ஹரிஷ் கல்யான் படத்திற்கு கிடைத்தது “யு/ஏ” சான்றிதழ்..!