×
 

இவங்களுக்கு சமந்தா போல ஆகணுமாம்ல..! எதைபற்றின்னு சொன்ன ஷாக் ஆகிடுவீங்க - பிளாக்மெயில்' பட நடிகை..!

பிளாக்மெயில்' பட நடிகை, சமந்தா போல ஆகணும் என்பது தான் என்னுடைய ஆசை என சொல்லி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அண்மைக் காலத்தில் குறிப்பிடத்தக்க புதிய முகங்களாக உருவெடுத்து வரும் நடிகைகளில் ஒருவராக தேஜு அஸ்வினி பெரும் கவனம் பெற்றுள்ளார். 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், திறமையான நடிப்பும், நடனத்திலும் காணப்படும் நயமும் காரணமாக ரசிகர்களிடையே விரைவாக பிரபலமானார்.

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் – தேஜு அஸ்வினி இணைந்து நடித்த ‘பிளாக்மெயில்’ படம் வெளியானது. படம் கதைக்களத்தாலும், அவரின் நடிப்பாலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களில் மிகவும் செயற்படுபவரான தேஜு அஸ்வினி, தனது சினிமா பயணம், தற்போதைய நிலை, எதிர்கால கனவுகள் குறித்து முதல் முறையாக விரிவாக மனம் திறந்து பேசினார். இப்படி இருக்க தனது ஆரம்ப வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி தேஜு அஸ்வினி பேசுகையில், “நான் சினிமாவில் வருவேன் என்று கூட நினைத்ததில்லை. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான் முதலில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். வேலை, ஃபேமிலி, வாழ்க்கை அனைத்தும் ஒரு நேர்த்தியான ரீதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது என் நண்பர்கள் எடுத்த ஒரு குறும்படத்துக்கான நடிப்புக்காக என்னை அழைத்தார்கள். அது வரை நான் கேமரா முன் நிற்பதே இல்லையே.. ஆனால் அந்த குறும்படம் என் வாழ்க்கையை புதிதாய் மாற்றிவிட்டது” என்றார்.

அந்த குறும்படத்தில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு பலரை கவர்ந்ததோடு, தொடர்ந்து பல குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்தன. குறும்படங்களின் மூலம் கிடைத்த அனுபவம் தேஜுவை மாடலிங் துறைக்கு இட்டுச் சென்றது. பல்வேறு பிராண்ட் புகைப்படப்பிடிப்புகள், ஃபேஷன் ஷூட்கள், விளம்பரப்படங்களின் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து, கேமரா முன் அவர் மேலும் தன்னம்பிக்கையுடன் திகழத் தொடங்கினார். மேலும் பேசுகையில், “நாட்கள் செல்ல செல்ல என் மனதில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகி வந்தது... நான் சினிமாவையே மிகவும் நேசிக்கிறேன் என்பதை. அதனால், நான் வேலைக்கு ராஜினாமா செய்து முழுமையாக சினிமாவுக்குள் நுழைய முடிவு செய்தேன். அது மிகப் பெரிய முடிவு தான்... ஆனால் தவறான முடிவாக ஒருபோதும் நினைக்கவில்லை” என அவர் கூறுகிறார்.

இதையும் படிங்க: நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கில் திருப்பம்..! சாட்சிகளிடம் விசாரணை செய்ய திட்டம்..!

தேஜு அஸ்வினி தனது கரியரில் முக்கிய மைல்கல்லாக நினைக்கும் படம் ‘பிளாக்மெயில்’. அதனை குறித்து பேசுகையில், “இந்த படத்தை நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த படத்தின் மூலம் எனக்கு மிகப்பெரிய மாற்றம் கிடைத்தது. ஜி.வி.பிரகாஷ் அவர்கள் தான் என்னை நடிக்க பரிந்துரை செய்ததாக நண்பர்கள் மூலமாக அறிந்தேன். அது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் தனித்தன்மை கொண்டது. எமோஷன், காமெடி, ரொமான்டிக், த்ரில்லர் என பல அம்சங்களைக் கொண்ட படம். அதை நான் என் மனதார நடித்தேன்” என்றார்.

மேலும் இந்த படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடையே தனித்துவமான அடையாளம் பெற்றுள்ளார். தனது தனிப்பட்ட குணநலன்கள் குறித்து பேசும் போது, தேஜு சிரித்தபடி பேசுகையில்,  “நான் எப்போதும் துருதுருவென்று இருப்பேன். சும்மா இருந்து விட முடியாது. எதையாவது செய்து கொண்டே இருப்பேன். எதையாவது பெரிய சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எப்போதும் இருக்கும். நேரத்தை வீணடிப்பதும் எனக்கு பிடிக்காது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதே என் கொள்கை” என்றார். அத்துடன் தேஜு அஸ்வினி படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்கியுள்ளார். அவரது பள்ளி–கல்லூரி நாட்களில் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகள் பெற்றுள்ளார். “என் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள். படிப்பு முக்கியம் என்று எப்போதும் சொல்வார்கள். அதனால், காதல் என்கிற விஷயத்திற்கு இடமே கிடைக்கவில்லை” என்று சிரித்தபடி கூறுகிறார். தேஜு அஸ்வினி தனது கனவு திட்டத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதில் “கவுதம் மேனன் சார் படத்தில் நடிக்க வேண்டுமென்பது என் மிகப் பெரிய ஆசை. அவரின் படங்களில் வரும் பாத்திரங்கள் மிகவும் ஆழமான உணர்வுகளைக் கொண்டவை. அவருடன் ஒருமுறை கூட வேலை செய்ய முடிந்தால் அது எனக்கு மிகப்பெரிய பெருமை” என்றார். அடுத்தபடியாக சமந்தா நடித்த ‘பேமிலி மேன் 2’ தொடரில் வரும் ஆக்ஷன் கேரக்டர் அவரை மிகவும் பாதித்திருக்கிறது. அதன்படி அவர் பேசுகையில், “அந்த மாதிரி ஆக்ஷன் ரோல்களில் நடிக்க விரும்புகிறேன். அதற்காக பாக்சிங், சிலம்பம் போன்றவற்றை தற்போது பயிற்சி செய்து வருகிறேன். பெண்கள் பலமான ரோல்களில் வருவது எனக்கு ஒரு பெரும் உந்துதலாக உள்ளது.” என சினிமாவில் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளார். மேலும் “என்னை பொறுத்தவரை, கதைக்கு அவசியம் இருந்தால் மட்டும் கவர்ச்சியாக நடிப்பேன். அது கூட ரசிக்கும்படியாக, வரையறைகளுக்குள் இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. அதிலிருந்து நான் ஒருபோதும் விலக மாட்டேன்” என்றார்.

சினிமா விமர்சகர்களின் பார்வையில் தேஜு அஸ்வினி, திறமையான நடிப்பு, நுணுக்கமான முகபாவனைகள், இயல்பான ஸ்க்ரீன் பிரசென்ஸ், நடனத் திறமை என இந்த நான்கு அம்சங்களாலும் முன்னேறி வரும் நடிகையென மதிக்கப்படுகிறார். அவருக்கு கிடைக்கும் கதாபாத்திர தேர்வுகளும் அதிகரித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே ஒரு தனியார் நிறுவன ஊழியராக இருந்தவர், சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக மாறிய பயணம் எளிதல்ல.

ஆனால் தேஜு அஸ்வினியின் உற்சாகமும் உழைப்பும், தனது தொழிலை நேசிக்கும் மனப்பான்மையும், இலக்கிற்காக எடுத்த தைரியமான முடிவும் அவரை முன்னேற்றுகின்றன. எனவே ‘பிளாக்மெயில்’ படத்தின் வெற்றிக்குப் பின், தேஜு அஸ்வினி தமிழ் சினிமாவில் இன்னும் பல முக்கிய வாய்ப்புகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் கனவும், ரசிகர்களின் நம்பிக்கையும் ஒன்றிணைந்து, அவர் கோலிவுட்டில் நீண்ட பாதையை வெற்றிகரமாக கடப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: A.R.Rahman கையிலதான் 'MOON WALK' படமே..! எல்லா பாடலிலும் அவர் வாய்ஸ் தான்..Vibe-ல் Fan's..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share