×
 

‘இந்தியன் 3’ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம்..! ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த இயக்குநர் சங்கர்..!

விரைவில் ‘இந்தியன் 3’ படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரமாண்டமான படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குனர் சங்கர். அவர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம், பாராட்டுகளும், வசூலும், தேசிய விருதுகளும் பெற்ற மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. சமூக ஊழலை வேரறுக்கும் ஓய்வுபெற்ற சுதந்திரப்போராட்ட வீரனாக கமல் நடித்த இந்தப் படம், தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு முக்கியமான படமாக இன்று வரை கருதப்படுகிறது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த ‘இந்தியன் 2’ திரைப்படம், நீண்ட கால தாமதங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 2024ல் வெளியானது. இதில் கமல்ஹாசனுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனலைசான படத்தை ஒட்டி வந்த அபார எதிர்பார்ப்புகள் இருந்த போதிலும், படம் திரையரங்குகளில் வெளியான பிறகு கொஞ்சம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பலர் திரைக்கதை கட்டமைப்பு, பழைய ‘இந்தியன்’ தரத்தை ஈடுகொடுக்காத இயக்கம், வேகமில்லாத திரைகதைகள் என பல குறைகளை முன்வைத்தனர். இதனால் படம் வசூலிலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இருப்பினும், ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முடிவில் காட்டப்பட்ட ‘இந்தியன் 3’க்கு உண்டான ப்ரோமோ மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் படம் தொடரும் எனவும், அந்தத் தொடரில் மீண்டும் கமல்ஹாசன் ‘சேனாபதி’ வேடத்தில், இன்னும் தீவிரமான பாத்திரமாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த சூழ்நிலையில், ‘இந்தியன் 3’ திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதனபடி சமீபத்தில், இந்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வெளிவந்துள்ளது. அதாவது, ‘இந்தியன் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நாளை வெளியாகும் 'மாரீசன்' படத்தின் முதல் ரிவியூ..! உலகநாயகன் கமல்ஹாசன் பதிவால் விமர்சகர்கள் அதிர்ச்சி..!

மேலும், இதன் படப்பிடிப்பு வெகு விரைவில் நிறைவடைந்து, 2026ல் திரைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இயக்குனர் சங்கர் தரப்பில் கேட்டபோது, ‘இந்தியன் 3’ குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி ஒரு திட்டவட்டமான அறிவிப்பை விரைவில் வழங்க திட்டமிடுகிறோம்” என கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கருத்து, ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ‘இந்தியன் 3’ பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இதற்கான முதலீட்டை மேற்கொள்ளவிருக்கின்றன என்று கூறப்படுகிறது. இப்படத்தில் மீண்டும் கமல்ஹாசன் தனது பழைய ‘சேனாபதி’ வேடத்தில் அதே ஆளுமையோடு திரும்ப வருகிறார் என்பது ரசிகர்களுக்குள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘இந்தியன் 2’ல் விடுபட்ட பல விஷயங்களை ‘இந்தியன் 3’ சரிசெய்யும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மொத்தத்தில், ‘இந்தியன் 3’ படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்ற தகவல் ரசிகர்களுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: நான் பார்த்த முதல் தமிழ் படம் "பாட்ஷா"..! உணர்வு பூர்வமாக பேசி கலங்க வைத்த நடிகர் ஃபஹத் பாசில்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share