×
 

சர்வதேச யோகா தினம்..! பாலிவுட் நடிகைகள் செய்த தரமான செய்கை..!

சர்வதேச யோகா தினத்தை பிரபலங்கள் எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் பாருங்கள்.

சர்வதேச யோகா தினமான இன்று, பலரும் தங்களது யோக கலையை போற்றி வருகின்றனர். சிலர் தங்களது இன்ஸ்ட்டா மற்றும் பல சமூக வலைதள பக்கத்தில்  யோகாசனம் செய்து பதிவிட்டு யோகாவின் முக்கியத்துவம் குறித்து பதிவிட்டு வருகின்றனர். அவர்களது வரிசையில் நடிகை ஷில்பா ஷெட்டி, மலைக்கா அரோரா, கரீனா கபூர், ஹினா கான், அனுபம் கெர் , நிம்ரத் கவுர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பிரபல பாலிவுட்  நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் யோகா செய்து அசத்தும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில் முதலாவதாக பிரபல நடிகையான "ஷில்பா ஷெட்டி" அவரது இன்ஸ்ட்டாவில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு அதன் கீழ், " நம்மிடம் ஏதாவது ஒன்று இருக்கும்போது, ​​அதை நாம் மதிக்க வேண்டும். இந்த ஆண்டின் கருப்பொருள் 'ஒரு பூமிக்கு யோகா, ஒரு ஆரோக்கியம்..' மனம், உடல் மற்றும் ஆன்மா இடையே சமநிலையைப் பேணுவதற்கு சமநிலையே முக்கியம். ஆரோக்கியம்.. அதை மதிப்போம், சம்பாதிப்போம், நமக்காக மட்டுமல்ல, நமது முழு சுற்றுச்சூழல் அமைப்பின் நலனுக்காகவும் அதைப் பாதுகாப்போம் " என பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சுவாரசிய சம்பவம்.. நெல்சனுடன் சேர்ந்து ரஜினி செய்த வேலையை பாருங்க..!

இரண்டாவதாக பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டாரான, "கரீனா கபூர்" அவரது இன்ஸ்ட்டாவில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு அதன் கீழ், "வழக்கத்தை விட அதிகமாக உங்கள் அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்" என பதிவிட்டு இருக்கிறார். 

மூன்றாவதாக பிரபல நடிகையான "மலைக்கா அரோரா" அவரது இன்ஸ்ட்டாவில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு அதன் கீழ், "யோகா ஒரு நாளுக்கு மட்டும் அல்ல. அது வாழ்க்கைக்கானது. எனவே உங்கள் நாளை யோகாவுடன் தொடங்குங்கள், அமைதியுடன் முடிக்கவும்  மற்றும் நன்றியுணர்வுடன்..... சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்" என பதிவிட்டு இருக்கிறார். 

நான்காவதாக பிரபல நடிகரான "அனுபம் கெர்" அவரது இன்ஸ்ட்டாவில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு அதன் கீழ், " யோகா இன் டைம் ஸ்கொயர் NY: நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற #டைம்ஸ்கொயரில் 11வது #சர்வதேச யோகா தினத்திற்காக #பாரதத்தில் கலந்து கொண்டது எனது பாக்கியம் மற்றும் மரியாதை! இந்த மிகவும் மதிப்புமிக்க நிகழ்வுக்கு என்னை அழைத்ததற்கு @indiainnewyork, @binaysrikant76 ஜிக்கு நன்றி. இந்த அற்புதமான சூழலில் #யோகா பயிற்சி செய்வது அருமையாக இருந்தது! ஜெய் ஹிந்த்! #YogaForOneEarthOneHealth" என பதிவிட்டு இருக்கிறார். 

ஐந்தாவதாக பிரபல நடிகையான "நிம்ரத் கவுர்" அவரது இன்ஸ்ட்டாவில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு அதன் கீழ்,  " யோகா என்பது செயலில் உள்ள திறமை. யோகா என்பது வெறும் ஆசனங்கள் அல்ல, அது பொருளின் மீது மனதின் சக்தி. நெகிழ்வுத்தன்மை மட்டுமல்ல, கவனம் செலுத்துதல். இந்தியாவின் பண்டைய வேத ஞானம் உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கு சுவாசம், உடல் மற்றும் இருப்பு ஆகியவற்றின் சமநிலையை தொடர்ந்து பரிசளித்து வருகிறது.  அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்... அமைதி, வலிமை மற்றும் சுய விழிப்புணர்வு ஆகியவற்றில் ஆழமாக நீட்டுவோம். ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா" என பதிவிட்டு இருக்கிறார். 

ஆறாவதாக நடிகை "ஹினா கான்" அவரது இன்ஸ்ட்டாவில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு அதன் கீழ், " சரியான பார்வையுடன் யோகா... யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் எல்லாம்.. உங்களுக்கு நீங்களே நல்லவராக இருங்கள்" என பதிவிட்டு இருக்கிறார்.

ஏழாவதாக நடிகை "ரகுல் பிரீத் சிங்" அவரது இன்ஸ்ட்டாவில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு அதன் கீழ், " இந்த கௌரவத்திற்கு மிக்க நன்றி :: இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் @mansukhmandviya அவர்களிடமிருந்து #fitniacouple விருதைப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.. @jackkybhagnani மற்றும் எனக்கு உடற்பயிற்சி என்பது ஒரு வாழ்க்கை முறையாகும், மேலும் நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்த உங்களுக்கான சிறிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என பதிவிட்டு இருக்கிறார். 

இப்படியாக பல பிரபலங்கள் உடலுக்கும் மனதிற்கு யோகா எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: குபேரா படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு 'ராஷ்மிகா' கொடுத்த ஷாக் தகவல்..! வியப்பில் படக்குழு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share