×
 

பிரபல நடிகையின் கன்னத்தில் அறைந்த நடிகர் நாகார்ஜுனா..! மன்னிப்பு கேட்டதால் தான்.. இஷா கோபிகர் ஓபன் டாக்..!

நடிகர் நாகார்ஜுனா பிரபல நடிகையான இஷா கோபிகர் கன்னத்தில் அறைந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

90களின் கனவு நாயகி என்றும் 2000களின் மனதை வென்ற நாயகி என தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய சினிமாவில் தனது பரபரப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகை தான் இஷா கோபிகர். இவர் சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்த  நேர்காணலில் தன் திரைப்பட வாழ்க்கையின் சில அத்துமீறல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக, தெலுங்கு மொழியில் வெளியான "சந்திரலேகா" என்ற படத்தில் நடிப்பின் போது அவர் சந்தித்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை நினைவுகூர்ந்தார். இஷா கோபிகர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த போதும், இன்றைய புதிய தலைமுறையினருக்கு இவர் அத்தகைய பரிச்சயமில்லாதவராகவே இருக்கிறார் எனலாம். தமிழ் திரைப்படங்களில் 'காதல் கவிதை', 'என் சுவாச காற்றே', 'நெஞ்சினிலே', 'நரசிம்மா', 'அயலான்' போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பால் போற்றப்பட்ட இவர், தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகிலும் பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னணி பற்றி இஷா பேசுகையில், "சந்திரலேகா" படத்தில் ஒரு கோபக் காட்சி எடுக்கப்பட்டது. அதில் அந்த காட்சி உண்மையான உணர்வை வெளிப்படுத்த, நாகார்ஜுனா என்னை உண்மையாகவே அறைய வேண்டும்.. அதனாலேயே அவரை என் கன்னத்தில் அறைய சொன்னேன். ஆரம்பத்தில்  என்னுடைய கோரிக்கையை நாகார்ஜுனா ஏற்க்கவில்லை.. பின்னர் ஏற்று கொண்டார்.. பின் அந்த காட்சியை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்த கிட்டத்தட்ட 14 முறை என் கன்னத்தில் அவர் அறைந்தார். அவர் அறைந்த இடத்தில் அடையாளங்களே வந்துவிட்டது.. பின்பு வேதனை தாங்காத நாகர்ஜுனா என்னிடம் மன்னிப்பு கேட்டார்" எனத் தெரிவித்தார்.  

இதையும் படிங்க: பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்..! பெண் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்..!

இந்த அனுபவம் குறித்து பேசும் போது, இஷா கோபிகர் நாகார்ஜுனா மீது தான் வைத்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஒரு உண்மை உணர்வை காட்சி வழியாக எடுத்துக்காட்ட தன்னை வருத்திக்கொள்ளும் செயல்களையும் செய்துள்ளனர் நடிகைகள் என்பதை இவரது பேச்சு எடுத்துரைப்பதாக உள்ளது. இப்படி இருக்க நாகார்ஜுனா என்பது தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகவே இருக்கிறார். அவருடைய வசனம் மற்றும் நடிப்பு திறமை சினிமா ரசிகர்களிடையே இன்றும் பெரிதளவில் மதிக்கப்படுகிறது. இப்படத்தில் அவருடைய இந்த ஒத்துழைப்பு, நடிகர்-நடிகையின் நட்பையும், அவர்களின் தொழில்முறை ஒத்துழைப்பையும் வெளிப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இஷா கோபிகரின் இந்த பேச்சு திரையுலகில்  உள்ள அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் இஷா கூறிய இந்த அனுபவம் பரவலாக பகிரப்பட்டது. 
 

இதையும் படிங்க: தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை பேசும் '300 கோமாளிகள்'..! இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share