'ஜெயிலர் - 2' மேக்கிங்-கே இப்படி இருக்குன்னா.. படம் எவ்வளவு பிரமாண்டமா இருக்கும்..! படக்குழு வெளியிட்ட புது வீடியோ..!
'ஜெயிலர் - 2' மேக்கிங் விடியோவை படக்குழு அதிரடியாக வெளியிட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போல, இந்த வருடமும் திரைப்பட உலகம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி மகிழ்வித்து கொண்டிருக்கிறது. முக்கியமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர் 2” திரைப்படம் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திலிருந்து தீபாவளி ஸ்பெஷல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவின் வெளியீட்டால் ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர். சில நிமிடங்களுக்குள் வீடியோ இணையத்தில் வைரலாகி, டிரெண்டாகி வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படம் சூப்பர் ஸ்டாரின் கெரியரில் ஒரு மாபெரும் வெற்றி படம் எனப் போற்றப்பட்டது. அந்தப் படத்தில் ரஜினிகாந்தின் கேரக்டர், அனிருத் இசை, நெல்சனின் திரைக்கதை, நகைச்சுவை கலந்த ஆக்ஷன் என அனைத்தும் சேர்ந்து ரசிகர்களை கவர்ந்தன. அதனால் ஜெயிலர் 2 மீது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படி இருக்க நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த் இணைவது ஒரு சிறப்பு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'சூரரை போற்று' படம் sample தான்..! மெயின் பிச்சரே sk-வின் "பராசக்தி".. புது டீசர் வெளியீடு..!
இந்த இணைப்பு ரசிகர்களிடையே “தலைவர் மீண்டும் திரைமேல் ஆளப்போகிறார்” என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் மீண்டும் வருவார்களா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதோடு, தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு நட்சத்திரம் நந்தமூரி பாலகிருஷ்ணா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இது ரஜினி ரசிகர்களுக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவரது கதாபாத்திரம் படத்தின் திருப்பத்தை தீர்மானிக்கும் முக்கிய பங்காக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதோடு, பகத் பாசில் உடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் முதல் பாகத்தில் “ஹலாமிதி ஹபீபோ”, “ஜெயிலர் தீம்” போன்ற பாடல்களால் அனிருத் ரசிகர்களை அதிர வைத்தார். இப்போது, ஜெயிலர் 2 க்காக அவர் இன்னும் அதிக ஆற்றலுடன் பணிபுரிகிறார் என இசை வட்டாரங்கள் கூறுகின்றன. மேக்கிங் வீடியோவிலும் பின்னணியில் ஒலித்த புதிய பீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சில நொடிகளில் கேட்கப்பட்ட அந்த பீட்டுக்கே பல மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. தற்போது படம் சென்னை, ஹைதராபாத், மற்றும் பாங்காக் நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் தற்போது தீவிரமாக ஆக்ஷன் சீன்களில் ஈடுபட்டுள்ளார். நெல்சன் திலீப்குமார் தனது வழக்கமான நகைச்சுவை, த்ரில், மற்றும் உணர்ச்சி கலவையை இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர உள்ளார்.
Here's a exclusive BTS from "Jailer2" - video link click here
இந்த படக்குழுவினர் தெரிவிகையில், “முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஸ்கேல், ஸ்டண்ட், மற்றும் விஷுவல் பிரசெண்டேஷன் மூன்றிலும் மிகப்பெரிய உயர்வு இருக்கும். ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அதற்கு மேல் ஒரு அனுபவத்தை வழங்குவோம்” என்கிறார்கள். இந்த நிலையில் படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோவில் ரஜினிகாந்தின் சில காட்சிகள், செட் காட்சிகள், மற்றும் குழுவினரின் உற்சாகம் காட்டப்பட்டுள்ளன. ரஜினி தனது இயல்பான புன்னகையுடன் படப்பிடிப்பு இடத்தில் ரசிகர்களிடம் கையசிக்கும் காட்சி ரசிகர்களுக்கு பரிசாக அமைந்துள்ளது. வீடியோ வெளியாகிய சில நிமிடங்களிலேயே, யூடியூப்பில் 10 லட்சம் பார்வைகளை கடந்தது. ட்விட்டரில் ரசிகர்கள் “தலைவர் கம்பேக் ஆஃப் த செஞ்சுரி”, “ஜெயிலர் 2 இஸ் கமிங் டு ருல்” போன்ற கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சினிமா வட்டாரங்களின் தகவலின்படி, ஜெயிலர் 2 அடுத்த ஆண்டு ஜூன் 2026ல் உலகமெங்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் விரைவில் பெரிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான சில ஸ்டில் புகைப்படங்கள் மற்றும் கசிந்த தகவல்கள் மூலம் படம் குறித்து ரசிகர்கள் பல விதமான கற்பனைகளில் மூழ்கியுள்ளனர். மொத்தத்தில், தீபாவளி நாளில் வெளியான ஜெயிலர் 2 மேக்கிங் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக மாறியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகுந்த தொழில்நுட்ப நுணுக்கத்துடன் உருவாகும் இந்த படம், தமிழ் சினிமாவின் அடுத்த மைல்கல்லாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!