ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் கொடுத்த கல்யாண அப்டேட்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தனது கல்யாணம் குறித்த அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை கட்டி வைத்ததுடன், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முக்கிய இடத்தைப் பிடித்தார் ஸ்ரீதேவி. அவரது மறைவுக்குப் பிறகும், அவருடைய புகழ் குறையவில்லை. அதற்கு காரணம், அவரது இரு மகள்களும் தற்போது இந்தி சினிமாவில் சிறப்பாக வளர்ந்து வருவது தான்.
ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிக்கு பிறந்த குழந்தைகளான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர், தற்போது பாலிவுட்டில் தனித்தனியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். ஜான்வி கபூர் ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பும், நடனம் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றமும் பாலிவுட்டில் தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், தற்போது ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் "சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி" வெளிவர உள்ளது. மனிஷ் மல்ஹோத்ரா தயாரிக்கும் இந்த படத்தில், ஜான்விக்கு ஜோடியாக வருண் தவான் நடித்துள்ளார். திருமணம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம், சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட விளம்பரத் தொடர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜான்வி, ஊடகவியலாளர்களிடம் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதில், திருமண திட்டம் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதற்கு அவர் அளித்த பதில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த கேள்விக்கு ஜான்வி பதிலலிகையில், "இப்போது எனது திட்டமெல்லாம் படங்களைப் பற்றித்தான் இருக்கிறது. எனது மனதிலும், நேரத்திலும் முழுவதும் சினிமாவுக்கே முக்கியத்துவம். திருமணத்திற்கு திட்டமிட இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இப்போதைக்கு அந்த யோசனையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். இந்த பதிலால் ஜான்வி தனது தொழில் முனைவோடு இருக்கிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க: தங்க உடையில் மின்னும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்..!
பாலிவுட்டில் தனது தாயின் பாதைபோல், தானும் வெற்றிகரமாக முன்னேற வேண்டுமென்ற குறிக்கோளுடன், வாழ்க்கையை கட்டமைத்து வருவதை அவரது பேட்டியில் இருந்து காணலாம். இது ஒருபுறம் ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் இருந்தாலும், மறுபுறம், திருமண வாழ்க்கையைத் தள்ளிப்போடுவது எப்படி நட்சத்திரங்களை மனதளவில் அழுத்தம் தந்துவிடுகிறது என்பதையும் பேசும் விவாதங்களுக்கு காரணமாகியுள்ளது. ஆனால் ஜான்வி கபூரின் பதிலில் உள்ள தூய்மையும், தெளிவும், அவரைப் போலவே இளம்பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், பெண்கள் தங்கள் கனவுகள் மற்றும் தொழில்முனைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது இங்கே மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. ஸ்ரீதேவி போலவே, அவரது மகளும் முன்னேற்றப் பாதையில் உறுதியுடன் செல்வதைப் பார்ப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
'தேவாரா' என்ற தெலுங்குப் படம் மூலம், ஜான்வி தனது தெலுங்கு டெப்யூவை செய்ய உள்ளார். இதில் ஜூனியர் என்.டி.ஆர் அவருடன் இணைந்து நடிக்கிறார். இவ்வாறு, ஒரு பன்முகத் திறமையாளர் என ஜான்வி கபூர் வளர்ந்து வருகிறார். அவரது புதிய படங்கள் மட்டும் அல்லாமல், அவருடைய நேர்மையான பேச்சும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கின்றது.
இதையும் படிங்க: இதுதான் உண்மையான சாதனை..! தனது அம்மா நடித்த படத்தின் ரீமேக்கில் நடிக்கும் மகள் ஜான்வி கபூர்..!