×
 

அழகுக்கு பெயர் தான் ஜான்வி கபூர்..! சேலையில் மிரளவைக்கும் கிளிக்ஸ்..!

நடிகை ஜான்வி கபூர் சேலையில் மிரளவைக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகில் ஸ்ரீதேவியின் மகளாக அறிமுகமான ஜான்வி கபூர், தனது அழகு, நவீன மின்னல் தோற்றம், 

நுட்பமான நடிப்புத் திறமை ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். 

இந்த நிலையில், தென்னிந்திய திரையுலகிற்குள் ‘தேவரா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜான்வி, 

தற்போது அடுத்த அசத்தலான பட வாய்ப்பை தட்டிச் சென்றுள்ளார். 

அந்த படத்தில் தான், ராம் சரண் நடிக்கிறார். இவர்களது நடிப்பில் வெளியாகவுள்ள ‘பெத்தி’ திரைப்படம்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்குவதால், இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

இதையும் படிங்க: ரசிகர்களை மிரள வைத்த நடிகை ஜான்வி கபூர்..! பரபரப்புகள் மத்தியில் வெளியான "பரம் சுந்தரி" ட்ரெய்லர்..!

குறிப்பாக, அவர் இயக்கிய ‘உப்பெனா’ திரைப்படம் வெற்றிகரமாக அமைந்ததோடு, கலாபாரம்பரிய பார்வையிலும் புகழ் பெற்றிருந்தது. 

இப்போது அவர், மெகா ஸ்டார் குடும்பத்தைச் சேர்ந்த ராம் சரணுடன் கூட்டணி அமைக்கிறார் என்ற செய்தி திரையுலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், ‘தேவரா’ படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஜோடியாக நடித்த ஜான்வி கபூர், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 

அந்த படம் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த ஜான்வி, தற்போது அடுத்த படத்திற்கு தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். 

அதன்படி, 'தேவரா' திரைப்படத்திற்காக ஜான்வி ரூ.5 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. 

 

 

இதையும் படிங்க: மல்லிகை பூவுடன் அழகிய சேலையில்.. தங்கமாய் ஜொலிக்கும் நடிகை ஜான்வி கபூரின் கிளிக்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share