ரசிகர்களை குழப்பும் விஜய்.. அரசியல் சும்மா.. சினிமா தான் மெயின்..! தளபதியின் பிளானை புட்டுப்புட்டு வைத்த நடிகை..!
நடிகை மமிதா பைஜூ பேச்சால் கொத்தி போய் இருக்கின்றனர் ரசிகர்கள்.
பல நாள் கஷ்டப்பட்டு உருவாக்கிய தனது சினிமா சாம்ராஜ்யத்தை விட்டு மக்கள் பணிக்காக வெளியே வந்திருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இதுவரை தனது 33 வருட கால சினிமா வாழ்க்கையில் 65 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் இளைய தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச நாயகனாக இருக்கிறார். இப்படிப்பட்ட இவர் தனது அடுத்த படமான லியோ-2 வில் நடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இனி சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபட போவதாக கூறி அனைவரையும் திக்கு முக்காட வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தனது கடைசி படத்தை எச்.வினோத் இயக்கத்தில் "ஜனநாயகன்" திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபிஜியோல், மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட சக நடிகர்களுடன் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ளார். வழக்கமாக நடக்கும் பிரச்சனைகள் ஒன்றும் குறையாமல் இந்த ஜனநாயகன் படபிடிப்பு சமயத்தில் நடந்தது. அதன்படி, சமீபத்தில், நடிகர் விஜய் நடித்து வந்த ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது.
இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று இருந்தது. மேலும் கமல் ஹாசன் தக் லைஃப் பட வெளியிட்டு விழாவில் ஏற்பட்ட மொழி பிரச்சனையில் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம் என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜனநாயகன்'..! அதிரடி அப்டேட் கொடுத்த படக்குழு..!
இப்படி பல பிரச்சனைகளை கடந்த இந்த படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான அப்டேட்டுகளை படக்குழுவினர் கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லி ஆகிய மூன்று பேரும் இப்படத்தில் வரும் குறிப்பிட்ட பாடலில் "நடிகர் விஜய்க்கு சென்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளில்" நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் அரசியல் கட்சிகளில் ஜெயிக்க வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசும் படமாக ஜனநாயகன் படம் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுதான் படத்தின் கதைக்களமாக இருக்கும் என்றும் அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் புரட்சிரமான வசனங்களை இப்படத்தில் எழுதி இருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத்.
இப்படி இருக்க, விஜயின் பிறந்தநாளான நேற்று அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் " The First Roar - Jana Nayagan " வீடியோவை வெளியிட்டு இருந்தனர் படக்குழுவினர். அந்த வீடியோவின் ஆரம்பத்தில், " என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து பற்றி எரியும் நெருப்புக்கு நடுவில் விஜய் காக்கி உடையில் நடந்து வருவது அட்டகாசமாக உள்ளது. மேலும், கடைசியாக கத்தியை வைத்து மீசையை முறுக்கி விடுவது எல்லாம் அல்ட்டிமேட்டாக உள்ளது" தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், விஜயின் 'ஜனநாயகன்' படத்தை பார்க்கும் ஆர்வம் அவரது ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. மேலும் விஜய் அவரது சமூக வலைதள பக்கத்திலும் இப்படத்தின் போஸ்டர்களை வெளியிட்டதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை மமிதா பைஜுவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்பொழுது ஒருவர் "விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் இனியும் தொடர்ந்து நடிப்பாரா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, பதிலளித்த நடிகை மமிதா பைஜு, " நான் விஜய் சாரிடம் இதே கேள்வியை தான் கேட்டேன். சார் நீங்கள் உண்மையாகவே சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு செல்கிறீர்களா..?உங்கள் கெரியர் சார் என கேட்டேன்..? அதற்கு விஜய், 2026 தேர்தல் முடிவுகளை பொறுத்து தான் எனது முழு முடிவையும் நான் எடுப்பேன். அப்பொழுது பார்க்கலாம் சினிமாவா... அரசியலா..." என அவர் கூறியதாக மமிதா தெரிவித்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன விஜய் அண்ணா குழப்புறாரே என புலம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: பற்றி எரியும் நெருப்புக்கு நடுவில் விஜய்..! 12 மணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனநாயகன் டீம்..!