×
 

அடகு வைத்த 3 பவுன் தங்கம் மர்மமாக மாயம்..! ஏமாற்றப்பட்ட பிக் பாஸ் தாமரைச்செல்வி.. துணை இயக்குனருக்கு போலீஸ் சம்மன்..!

பிக் பாஸ் தாமரைச்செல்வி தான் ஏமாற்றப்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிடுள்ளார்.

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் வசித்து வரும் ‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான தாமரைச்செல்வி, சமீபத்தில் மிகப் பெரிய அதிர்ச்சி சம்பவத்தில் சிக்கியுள்ளார். பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருவதால் தொடர்ந்து பிரபலமாக இருக்கும் இவரின் குடும்பத்தில் நடந்த ‘நம்பிக்கையை துரோகம் செய்த’ இந்த விவகாரம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகி வருகிறது.

தாமரைச்செல்வி குடும்பத்துடன் நெருக்கமாக பழகி வந்த துணை இயக்குனர் ஒருவர், அவசரத் தேவைக்காக பணம் தரும்படி பார்த்தசாரதியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. குடும்ப உறவு போல் நம்பிக்கை வைத்திருந்ததால், அவரை நிராகரிக்க முடியாமல், வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகையை அவரிடம் கொடுத்து, அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளச் சொல்லியதாக தகவல்.

இதன்படி அய்யப்பன்தாங்கல் பகுதியில், அந்த நகையை துணை இயக்குனர் தனது பெயரில் அடகு வைத்து, தேவையான தொகையை பெற்றுக்கொண்டார். முதலில் எல்லாமே சீராக இருக்கிறது போல் தோன்றினாலும், சில வாரங்களுக்கு பிறகு நகையை மீட்க சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது.

இதையும் படிங்க: நடிகைகள் கிளாமரா வந்தா ரசியுங்கள்.. குறைசொல்லாதிங்க..! உங்களுக்காகத்தானே எல்லாமே.. திஷா பதானி காட்டம்..!

நகை ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது..அதிலும் அதிர்ச்சியூட்டியது என்னவென்றால்.. அந்த நகையை மீட்டவர் தாமரைச்செல்வி குடும்பம் அல்ல, அத்துணை இயக்குனரே.. மேலும், அவர் அதை கூடுதல் தொகைக்காக ஏற்கனவே விற்றுவிட்டதாக தெரியவந்தது. இதனால் தாமரைச்செல்வி மற்றும் அவரது கணவர் பார்த்தசாரதி முற்றிலும் அதிர்ச்சியும் அடைந்தனர். நம்பிக்கையுடன் கொடுத்த நகையே துரோகத்திற்கு பலியாகிவிட்ட சூழ்நிலை, குடும்பத்தில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பார்த்தசாரதி போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிக்கலில் உள்ள துணை இயக்குனரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாமரைச்செல்வி தன் சமூக வலைதளத்தில் நேரடியாக வீடியோ பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.

“நம்பிக்கை வைத்து ஒன்றை செய்தால் இப்படி ஆகிவிடக்கூடாது. குடும்பமாக நாங்கள் மிகப் பெரிய பிரச்சனையை சந்திக்கிறோம்” என்று கூறிய அவர், உண்மை வெளிவர வேண்டும் என்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

போலீசார் இந்த சம்பவத்தில் வேகமாக விசாரணை செய்து வருவதாகவும், குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் துணை இயக்குனருக்கு சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாமரைச்செல்வியின் வீடியோவும், இந்த விவகாரத்தின் முழு விவரமும் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வரும் நிலையில், “நகையா? நம்பிக்கையா? – எதை மீட்பது கடினம்?” என்ற கேள்வியே தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: மனைவிகளை கடுப்பாக்கும் கணவர்கள்.. காரணம் என் அழகு தான்..! நடிகை ஷில்பா மஞ்சுநாத் பரபரப்பு பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share