அனைவரையும் வீட்டில் உட்கார வைக்க போகிறது "ஜூலை-19"..! இந்த வாரம் 'ஒன்னு' இல்ல..'ஐந்து' படமாம்..!
ஓடிடியில் ஒரே நாளில் வெளியாக காத்திருக்கும் ஐந்து படங்கள் என்னென்ன தெரியுமா.
இன்று சினிமா என்பது அனைவருக்கும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது.இதில் ஒருவருக்கு ஆக்ஷன் பிடிக்கும், இன்னொருவருக்கு காதல், சிலருக்கு திரில்லர்,மர்மம், சிலருக்கு குடும்பம் என தங்களுக்கு பிடித்தமான கதையம்சம் கொண்ட படங்களை கண்டு ரசிக்கின்றனர். மேலும் தியேட்டர்களில் மட்டுமல்லாமல் ஓடிடியிலும் கண்டு ரசிக்கின்றனர். இப்படி வாரம் வாரம் புது படங்கள் ஓடிடி தளமான 'JioCinema, Amazon Prime Video, Aha, ZEE5, Disney+ Hotstar' என பல தளங்களில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் ஜூலை 19ம் தேதியுடன் தொடங்கும் முக்கியமான ஓடிடி ரிலீஸ் படங்களின் லிஸ்டுகளை பார்ப்போம்.
1. DNA (டிஎன்ஏ) : இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்த ‘டிஎன்ஏ’ திரைப்படம், சமூகத்திற்குள் பதுங்கி வாழும் மர்மக் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும், வசூலிலும் வெற்றியையும் பெற்றது. ஒரு குடும்பத்தைச் சுற்றி இருக்கும் மர்மங்கள், உண்மையைக் கண்டறியும் கதையின் நகர்வுகள், உணர்ச்சியும் சஸ்பென்ஸும் கலந்து உருவாகியுள்ள இந்த படம் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இப்படிப்பட்ட படம் வருகின்ற ஜூலை 19-ம் தேதி "Disney+ Hotstar"-ல் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: ஒருவழியாக ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த 'குபேரா' படக்குழுவினர்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
DNA TRAILER - கிளிக் செய்து பாருங்க..!
2. குபேரா: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் சேகர் கம்முலா கூட்டணியில் உருவான ‘குபேரா’ திரைப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. சமூகப்பண்பாடு என்ற நவீன கதைக்களத்துடன் வெளியான இத்திரைப்படத்தில், தனுஷின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களது நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் கலக்கி இருக்கும் இப்படம், ஜூலை 19-ம் தேதி "Amazon Prime" தளத்தில் வெளியாக இருக்கிறது.
Kuberaa Trailer - கிளிக் செய்து பாருங்க..!
3. மனிதர்கள் : அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கிய ‘மனிதர்கள்’ படம், புதுமுக நடிகர்களின் திரில்லர் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ளது. ஒரே இரவில் நடக்கும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் மனநிலைகளை அலசி ஆராயும் கதைகளத்துடன், மனிதனின் மனதில் உள்ள விசித்திரங்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது இந்தப் படம். வெவ்வேறு மனிதர்கள் எப்படிப் பணம், ஆசை, வன்மம் போன்ற உணர்வுகளால் வழிகாட்டப்பட்டு சீரழிகின்றனர் என்பதை வெளிப்படையாக காட்டும் இப்படம் பிரபல "ஆஹா தமிழ்" ஓடிடி தளத்தில் ஜூலை 19ஆம் தேதி வெளியாகிறது.
Manidhargal -Trailer - கிளிக் செய்து பாருங்க..!
4. பைரவம் : ஹிட் படமான 'கருடன்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படம் தான் ‘பைரவம்’, ஒரு வனப்பகுதியில் அதிகாரம் மற்றும் மனிதநேயத்தின் மோதலை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில், பெல்லம் கொண்டா ரோகித், அதிதி ஷங்கர், திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை, விஜய் கனகமெடலா இயக்கியுள்ளார். மக்கள் மற்றும் இயற்கை சார்ந்த வனவாழ்வின் முக்கியத்துவத்தையும், அதில் நிகழும் சமுதாய பிரச்சனைகளையும் குறித்து இப்-படம் வெளிப்படையாக பேசுகிறது. சமூகப் பொறுப்பும், ஆக்ஷனும் கலந்த இந்த திரைப்படம், பிரபல ஓடிடி தளமான "ZEE-5" தளத்தில் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது.
Bhairavam Trailer - கிளிக் செய்து பாருங்க..!
5. சட்டமும் நீதியும் : ஒரு சாதாரண வக்கீல், தனது வழக்கில் நீதியை பெற தனக்கு எதிராக நிற்கும் எதிரிகளுக்கு தயங்காமல் எதிர்க்கும் வகையில் உருவான ஒரு கோர்ட் ரூம் டிராமா தான் ‘சட்டமும் நீதியும்’. பருத்திவீரன் புகழ் சரவணன், நம்ரிதா, அருள், ஷன்முகம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இந்த வெப் தொடர், உண்மையான நீதிக்காக நடக்கும் போராட்டங்களையும், சட்ட அமைப்பின் பலவீனங்களையும் நீதிமன்றங்கள் குறைவாகவும் குற்றங்கள் அதிகமாகவும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த தொடர், சமூக நியாயத்திற்கு மத்தியில் நின்று சிந்திக்க வைக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இப்படிப்பட்ட உன்னதமான படைப்பு பிரபல "ZEE-5" ஓடிடி தளத்தில் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது.
Sattamum Needhiyum - கிளிக் செய்து பாருங்க..!
இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள், சினிமாவின் பல்வேறு மொழிகள் சார்ந்த படங்களின் மர்மம், சமூக பின்னணி, நீதிக்கான போராட்டம், மனித உணர்வுகள், வனச்சூழல், ஆக்ஷன் என படத்தின் சிறப்பம்சங்களை குறிப்பதாக உள்ளது. எனவே மறக்காமல் படத்தை கண்டு மகிழுங்கள்.
இதையும் படிங்க: 'மதராஸி' படம் பார்க்க தயாரா மக்களே..! போஸ்ட் போட்டு ஹைப்பை ஏற்றிய படக்குழு..!