என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி..! ஜூனியர் என்.டி.ஆர் நெகிழ்ச்சி பதிவு..!
ரசிகர்களால் நான் ரசிகர்களுக்காகவே நான் என ஜூனியர் என்.டி.ஆர் நெகிழ்ச்சி பதிவு பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு நடிகர் ஒருவர் பாலிவுட்டில் கலக்கி வருகிறார் என்றால் அவர் தான் மக்களால் போற்றப்படும் ஜூனியர் என்.டி.ஆர். அவரது நடிப்பில் வெளியான ட்ரிப்பில் ஆர் படத்தை யாராலும் மறக்க முடியாது. அதிலும் அந்த படத்தில் ஒரு பெண்ணை காப்பாற்ற காப்பானாக வருவதும், நட்புக்காக இருவரும் செய்யும் செயல்கள் அனைத்தும் அட்டகாசமாக இருக்கும். அந்த வகையில் ஜூனியர் என்.டி.ஆர் படம் வந்தாலே பார்க்க ஒரு கூட்டம் உள்ளது என்றே சொல்லலாம். இப்படி இருக்க, நடிகர் ரஜினியின் கூலி படம் வெளியாகும் நேரத்தில் அவரது நடிப்பில் வெளியாக உள்ள வார்2 திரையப்படமும் வெளியாக உள்ளது.
இப்படி இருக்க, கடைசியாக இவரது தேவாரா படம் மிகவும் அட்டகாசமாக இருந்தது. இந்த சூழலில், தற்பொழுது கேஜிஎஃப் மற்றும் சலார் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வரும் ஜூனியர் என்டிஆர் படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் வேலையில், மற்றொரு பக்கம் தெலுங்கு சினிமாவில் இருந்து பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அந்த வகையில் ஹ்ரித்திக் ரோஷன் படத்தில் அவருடன் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த படம் தான் "வார் 2". ஜூனியர் என்டிஆரின் 42வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு "வார் 2" படத்தின் டீசர் வெளியானது.
இதையும் படிங்க: மே-9ல் வெளியாக காத்திருக்கும் '9' படங்கள்..! எந்த படத்தை பார்ப்பது என ரசிகர்கள் குழப்பம்..!
யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் தயாரிப்பில், 'பிரம்மாஸ்திரா' பட இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி, ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இந்த "வார் 2" திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படி அவரது பிறந்தநாள் அன்று "வார் 2" டீசர் வெளியான நிலையில் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்," 'வார் 2' டீசருக்கு நீங்கள் கொடுக்கும் வரவேற்புக்கும் நன்றி. பட ரிலீஸுக்காக காத்திருக்கிறேன். என் திரைப் பயணத்தில் ஒவ்வொரு முறையும் நான் பின்னால் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் முதலில் என் நினைவுக்கு வருவதே ரசிகர்கள்தான்" என மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இப்படியா படம் எடுப்பாங்க.. யார் அந்த டைரக்டர்..! டூரிஸ்ட் ஃபேமிலி பற்றி விமர்ச்சித்த அமைச்சர் மா.சு..!