×
 

பாரம்பரிய உடையில் சொக்க வைக்கும் அழகில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்..!

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் பாரம்பரிய உடையில் சொக்க வைக்கும் அழகில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழித் திரைப்படங்களிலும் தன்னுடைய தடத்தை வலுவாக பதித்து வரும் இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

தன்னுடைய நுணுக்கமான நடிப்பு, இயல்பான முகபாவனைகள், மற்றும் சீரிய கதாபாத்திரத் தேர்வுகளால் இன்று தெற்குத் திரையுலகின் மதிப்புமிக்க நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார்.

இதையும் படிங்க: லோகா ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷனா இது ..! ட்ரெண்டிங் லுக்கில் இருக்கும் போட்டோஷூட்..!

திரையுலக குடும்பத்தில் பிறந்தாலும், தன்னுடைய பெயரை தனக்கென உருவாக்கியவர் கல்யாணி. 

கல்யாணி பிரியதர்ஷன், 1993ம் ஆண்டு சென்னை நகரில் பிறந்தார். அவரது தந்தை பிரியதர்ஷன் இந்தியாவின் முன்னணி இயக்குனர் மற்றும் எழுத்தாளர்.

சினிமா என்பது கல்யாணியின் வாழ்க்கையின் ஒரு இயல்பான பகுதி. எனினும், அவர் முதலில் திரைத்துறைக்கு நுழைவதற்கு முன் கல்வியில் சிறந்து விளங்கினார்.

கல்யாணி பிரியதர்ஷன் தனது நடிகை வாழ்க்கையை தெலுங்கு சினிமாவில் தொடங்கினார். 

அவர் நடித்த முதல் படம் “Hello” (2017).  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கல்யாணி தனது தாய்மொழியான மலையாளத்தில் அறிமுகமானார். 

இதையும் படிங்க: ட்ரெண்டிங் உடையில் மாஸாக ஜொலிக்கும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share