அநியாயம் பண்ணுறாங்க சார்..! உயிருக்கு பயந்து சென்னை காவல் ஆணையர் அலுவலக கதவை தட்டிய நடிகை கௌதமி..!
உயிருக்கு பயந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்று புகார் கொடுத்த நடிகை கௌதமி.
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை கௌதமி, தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், நிகழ்ச்சி நடுவர், சின்னத்திரை நாடக நடிகை என பல அவதாரங்களை தனக்குள் வைத்திருப்பவர். அப்பொழுதே "சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்" என்ற பாட்டுக்கு ஆடி பட்டி தொட்டி வரை பிரபலமானவர். இப்படி பட்டவர் கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்து இருந்தாலும் பாபநாசம் படத்தில் நடித்தது பலருக்கும் பிடித்து இருந்தது.
இப்படி பட்ட கௌதமி, இதுவரை தமிழில் புதிய வானம், நம்ம ஊரு நாயகன், குரு சிஷ்யன், ராஜா சின்ன ரோஜா, தர்மம் வெல்லும், அபூர்வ சகோதரர்கள், ராஜநடை, சீதா, வேலை கிடைச்சுடுச்சு, பணக்காரன், தர்மதுரை, தேவர் மகன், செந்தூரபாண்டி, நம்மவர், ஆனஸ்ட் ராஜ், குருதிபுனல், இருவர், பாபநாசம், நமது, சகுந்தலம், துப்பறிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: செல்வராகவன் காலனிக்கு செல்ல தயாரா..! வந்தது '7ஜி ரெயின்போ காலனி 2' ரிலீஸ் டேட்..!
இப்படி இருக்க ஏற்கனவே நடிகை கௌதமியுடன் வேலை பார்த்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து அவருடைய சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இதனை அடுத்து அழகப்பன் நீலாங்கரையில் உள்ள தனது ரூ.9 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அபகரித்து உள்ளார் என புகார் அளித்தார். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்க, அந்த இடத்தில் சட்டவிரோதமாக மாநகராட்சியில் இருந்து மின் இணைப்பு மற்றும் கட்டிட அனுமதி பெற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக கௌதமி நீதிமன்றத்தை நாட நீதிமன்ற உத்தரவின் பெயரில் அந்த இடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், தனது நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டுமானத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் என்ற பெயரில் சிலர் தன்னை தொடர்பு கொண்டு ரூ.96ஆயிரம் கேட்பதாகவும், வழக்கறிஞர் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி தன்னை மனஉளைச்சலாக்கி வருவதுடன் தன்னை மிரட்டுவதாகவும் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக போஸ்டர்களும் அனுப்பி வேதனை படுத்துவதாகவும் தெரிவித்து, தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் தன்னை மிரட்டும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார் நடிகை கௌதமி.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஆதரவு கொடுப்பியா..? சந்தானம் மீது ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கு போட்ட பாஜக..!