×
 

தமிழை பெருமையாக பேசிய கமல்ஹாசன்...! தக் லைஃப் பட போஸ்டரை கிழித்து வார்னிங் கொடுத்த கன்னட மக்கள்..! 

தமிழ் இல்லையென்றால் கன்னடமே இல்லை என பேசிய கமலஹாசனுக்கு கண்டன குரல் வலுத்து வருகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்த சூழலில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள "ஓ மாறா" பாடலின் லிரிக் வீடியோ படக்குழுவினரால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 'ஜம்பப்பா மன்னாரே' என தொடங்கும் இப்பாடலின் வரிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், ஊர் எதிர்த்தாலும் அவனுக்கு ஆயிரம் யானை-யின் பலம் ! யார் தடுத்தாளும் அதை போரிட்டு முடிகிற குணம் ! இது யாருக்கும் அடங்காத ரணம் !இங்கே அவனுக்கும் பயம் இல்லே டா என்ற வரிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். 

இதையும் படிங்க: கூலி படத்தின் பட்ஜெட்டே இவ்வளவு கோடின்னா.. படம் வசூல் எத்தனை கோடியாக இருக்கும்..!

இப்படி இருக்க, இப்படத்தின் ஃபிரமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்தினம், சிம்பு, திரிஷா, கமல்ஹாசன், சிவராஜ்குமார் என பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய சிவராஜ்குமார், "நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்பது அனைவருக்கும் தெரியும். எனது சகோதரன் மறைவுக்கு பின் எனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தனர் மருத்துவர்கள். இதனால் அமெரிக்காவிற்கு என்னை அழைத்து சென்று ஆபரேஷன் செய்தனர். ஆப்ரேஷன் முடிந்த சமயத்தில் நடிகர் கமலிடம் இருந்து எனக்கு போன் வந்தது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் சரியாகவிடும் என்றார். அந்த இரண்டே வார்த்தையில் என்னை மறந்து அழ ஆரம்பித்து விட்டேன். 

உண்மையில் ஹீரோ என்றால் கமல் மாதிரி தான் இருக்கணும். கமல் என்றால் அழகு. ஒருவேளை நான் மட்டும் பெண்ணாக பிறந்து இருந்தால் கண்டிப்பாக அவரை திருமணம் செய்து இருப்பேன். இதனை நான் பலமுறை உங்கள் மத்தியில் கூறியிருக்கிறேன். ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது என் அப்பாவிடம் என்னை யார் என கேட்டார். அதற்கு அப்பா இவன் என் மகன் என்றார். அப்போது நான் கமலை பார்த்து ஒருமுறை உங்களை கட்டிப்பிடிக்கலாமா என கேட்டேன். அவரும் உடனே சம்மதித்தார். அதன்பின் மூன்று நாட்கள் நான் குளிக்கவே இல்லை. ஏனெனில் கமலின் ஆரா எனக்கு தேவைப்பட்டது. அந்தளவுக்கு நான் அவரின் வெறித்தனமான ரசிகன்" என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், " உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும் தான். எனது குடும்பம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதனை பார்த்த கர்நாடக மக்கள் கன்னட மொழியை குறித்து அவதூறாக கமல் பேசியிருப்பதாக கூறி தக் லைப் படம் வெளியிட கூடாது என பிரச்சனை செய்து வருகின்றனர். 

இதனை பற்றி, கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி பேசுகையில் , " நாங்கள் நடிகர் கமல்ஹாசனை எச்சரிக்கிறோம். உங்களுக்கு தேவை என்றால் கர்நாடகாவில் வந்து வியாபாரம் செய்து கொள்வீர்கள். ஆனால் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா?. கர்நாடக வந்த உங்கள் மீது கருப்பு மை பூச நாங்கள் அனைவரும் தயாராக இருந்தோம். ஆனால் நீங்கள் தப்பித்து ஓடிவிட்டிர்கள். கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராக இனி நீங்கள் பேசினால் உங்களுக்கு எதிரான போராட்டங்கள் கடுமையாக நடத்தப்படும் என எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் கண்டிப்பாக தடை செய்யப்படும் என தெரிவித்தார். 

இவரை தொடர்ந்து, கர்நாடகா மாநில பா.ஜ.க தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, நடிகர் கமல்ஹாசனை எக்ஸ் வலைதளத்தில் விமர்சித்துள்ளார். அதில், "ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவம் காட்டுவது நாகரீகமற்ற நடத்தை. குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன் கன்னடத் தமிழ் மொழியைப் போற்றும் புகழாரத்தில் நடிகர் சிவராஜ்குமாரைச் சேர்த்து அவமதிப்பது ஆணவத்தின் உச்சம் மற்றும் ஆணவமாகும். இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் கன்னட மொழி பல நூற்றாண்டுகளாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. உலக மொழிகளில் கன்னட மொழிக்கு மிக உயர்ந்த அங்கீகாரம் உள்ளது என்பதை கமல்ஹாசன் போன்ற குறுகிய மனப்பான்மை கொண்ட, மதவெறி பிடித்த நபர்கள் குறைந்தபட்சம் புரிந்து கொள்ளட்டும்.

கன்னட மக்களை அவமதிப்பதற்கு முன்பு கன்னடப் படங்களிலும் நடித்துள்ள கமல்ஹாசன், கன்னடர்கள் மற்றும் கன்னடர்களின் தாராள மனப்பான்மையை மறந்து, அவர்களின் நன்றியற்ற ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். தென்னிந்தியாவிற்கு நல்லிணக்கத்தை கொண்டு வர வேண்டிய கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்தும், மத உணர்வுகளைப் புண்படுத்தியும் வருகிறார். இப்போது, ​​அவர்கள் 65 மில்லியன் கன்னடர்களின் சுயமரியாதையைப் புண்படுத்தி கன்னடத்தை அவமதித்துள்ளனர். கமல்ஹாசன் உடனடியாக கன்னடர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

எந்த மொழி எந்த மொழியிலிருந்து தோன்றியது என்பதை வரையறுக்கக்கூடிய வரலாற்றாசிரியர் கமல்ஹாசன் அல்ல. ஆனால் இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கன்னட மொழி, இந்திய வரைபடத்தில் செழிப்பைக் குறிக்கிறது மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கிறது. மொழி வெறுப்பாளர் அல்லாத, ஆனால் கன்னட நிலம், மொழி, மக்கள், நீர் அல்லது கருத்துக்கள் என்று வரும்போது ஒருபோதும் சுயமரியாதையைத் தியாகம் செய்யாத ஒரு உண்மையான ஞானியைப் போலப் பேசிய கமல்ஹாசனை நினைவில் கொள்வோம்" என்றார். 

இதையும் படிங்க: டூரிஸ்ட் ஃபேமிலி படம் அல்ல.. அது ஒரு காவியம்..! நடிகர் நானி உருக்கமான பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share