×
 

அசத்தும் அழகில் பாலிவுட் நடிகை கரீனா கபூர்...! 44 வயதிலும் அழகு குறையாத முக தோற்றத்தில்...! 

44 வயதிலும் அழகு குறையாத முக தோற்றத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.

2000ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து "ரெஃப்யூஜி" என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் நடிகை கரீனா கபூர். அந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அதே ஆண்டில் நடிகை கரீனா கபூர் விமர்சன ரீதியாக பாராட்டையும், சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். 

இதனை அடுத்து, அதே ஆண்டில் "முஜே குச் கெஹ்னா ஹை", "யாதீன்" மற்றும் "அஜ்னபி" போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர், 2001 ஆம் ஆண்டு சந்தோஷ் சிவன் இயக்கிய 'அசோகா' என்ற படத்தில் பாலிவுட் கிங் கானுடன் நடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து, சூப்பர் ஹிட் படமான 'கபி குஷி கபி கம்' என்ற படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.

இதையும் படிங்க: நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் "லுக் டெஸ்ட்" காட்சிகள் வெளியாகி உள்ளது..!

அதன் பின், 2007 ஆம் ஆண்டு வெளியான காதல் நகைச்சுவைப் படமான 'ஜப் வீ மெட்' என்ற படத்தில் நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடித்து, பாலிவுட்டில் மிகவும் பிரபலமான காதல் படங்களில் ஒன்றாக மாறியது. பின்னர் இந்தப் படம் தமிழில் "கண்டேன் காதலை" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 

பின்னர், கோல்மால் ரிட்டர்ன்ஸ், 3 இடியட்ஸ், மிலேங்கா, மிலேங்கா, கோல்மால்-3, பாடிகார்ட் மற்றும் ரா-ஒன் போன்ற தொடர்ச்சியான காதல் நகைச்சுவைத் திரைப்படங்களில் நடித்தார்.

அஜய் தேவ்கனின் அதிரடித் திரைப்படமான 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' மற்றும் 'சல்மான் கானின் பஜரங்கி பைஜான்',  'கி & கா'  'உத்தா பஞ்சாப்' போன்ற படங்களில் நடித்தார். இப்படங்களுக்கு பிறகு தனது முதல் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த கரீனா, நீண்ட கால இடைவெளிக்கு பின் 2018ம் ஆண்டு "வீரே தி வெட்டிங்" மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதன் பிறகு, அவர் ஆங்ரேஸி மீடியம், குட் நியூஸ் மற்றும் லால் சிங் சத்தா போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், நடிகை கரீனா கபூர் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாவில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  

இதையும் படிங்க: போலீசிடம் வசமாக சிக்கிய துணை நடிகை... எந்த வழக்கில் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share