×
 

கரூர் சம்பவம் நீங்காத வடு.. விஜய் இனி எப்படி துங்குவீங்க..! நடிகர் ரஞ்சித்தின் ஆவேச பேச்சால் பரபரப்பு..!

நடிகர் ரஞ்சித் கரூர் சம்பவத்தில் விஜயின் நடவடிக்கை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக ஆன்மீக வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் மட்டுமின்றி சீனா, ஜப்பான், கம்போடியா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர். இதனால் இந்த நிகழ்வு உலக அளவில் தமிழ் ஆன்மீக கலாசாரத்தின் பிரகாசத்தை மீண்டும் வெளிக்கொணர்ந்தது.

இப்படி இருக்க முருக பக்தர்களின் சமயக் கருத்துகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெற்றது. நிகழ்வில் வேலின் மகிமை, ஆறுபடை வீடுகளின் தத்துவம், கந்தசஷ்டியின் ஆன்மீக அர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சாளர்கள் விரிவாக விளக்கினர். மாநாட்டின் இறுதியில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, வரும் அக்டோபர் 25, 26, 27 தேதிகளில் நடைபெறவுள்ள திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா மிகுந்த விமர்சையாக கொண்டாடப்பட வேண்டும் என்பதுதான். எனவே திருவிழாவுக்கான முன்னோட்ட நிகழ்வாக அறுபடை வீடுகளில் வேல் பூஜை தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையோரம் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சிறப்பான வேல் பூஜை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “வேல் முருகன் வேல் வேல்” என்று முழக்கமிட்டனர். ஆன்மீக உற்சாகம் பரவலாக காணப்பட்டது. இந்த சூழலில் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்துகொண்டு வேல் பூஜையைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஊடகவியலாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், “நாடு நலம்பெற வேண்டி கந்தசஷ்டி பாராயணம் ஆயிரம் கோவில்களில் நடைபெறவுள்ளது. வேல் பூஜை, கோ பூஜை போன்ற ஆன்மீக நிகழ்வுகள் சமூக ஒற்றுமையை வளர்க்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேல் கொடுத்து பூஜை செய்தேன். மேலும் கரூர் சம்பவத்தால் நடிகர் விஜய் மிகுந்த வேதனையில் இருப்பார். எந்த தலைவரும் தமது கூட்டத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. 41 பேர் உயிரிழந்தது அவரது வாழ்க்கையில் என்றும் ஒரு வடுவாகவே இருக்கும்.

இதையும் படிங்க: நடிகை மீது தீராத ஆசை...மது கொடுத்து சீரழித்த பிரபல இயக்குநர்..! வசமாக சிக்கியது எப்படி..!

எனவே அரசியலில் நிரந்தர நண்பரும் எதிரியும் கிடையாது. காவல்துறை பிடிக்கும்போது யு-டர்ன் போட்டு திரும்பிச் செல்வது போல, அரசியலும் மாற்றம் அடைகிறது. கடவுள் முன் எல்லோரும் சமம். நாம் மனிதர்கள், அணுக்கள், துகள்கள் தான். வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது சமத்துவத்தின் அடையாளம். தேசத்தை காப்பது நமது கடமை. இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயம் வளர வேண்டும். மதப்பிளவு இல்லாமல் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த பாராயணம் நடக்கிறது, நான் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் நல்லவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பது என் கனவு. அரசாங்கம் தான் உண்மையான கடவுள். அவர்கள் நம் கண் முன்னால் மனித தெய்வங்களாக இருக்கிறார்கள். அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மக்கள் நன்றாக இருப்பார்கள்.

அத்துடன் தமிழ்நாடு இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும், ஒரு வாக்காளராக என் வேண்டுதல் அதுதான். ஒருநாள் மக்கள் பணி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் செய்வேன்” என்றார். இதனை தொடர்ந்து இந்த வேல் பூஜை நிகழ்வுடன், திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவுக்கான தயாரிப்புகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் பக்தர்கள் பெருந்தொகையில் திருச்செந்தூருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். தங்கும் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், கடல் நீராடும் பாதுகாப்பு பணிகள் ஆகியவை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் சிறப்பம்சம், வெளிநாடுகளிலிருந்து வரவிருக்கும் முருக பக்தர்களின் பெரும் பங்கேற்பு ஆகும்.

ஜப்பான், மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் முருக வழிபாடு பரவலாக நடைபெறுவதால், அங்குள்ள தமிழ் பேசும் பக்தர்கள் பெருமளவில் வரவிருக்கிறார்கள். “இந்த திருவிழா ஆன்மீக டூரிசம்” என அரசு சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மாநாட்டின் நிறைவில், “முருக பக்தர்களின் ஒற்றுமை சமூக நலனின் அடிப்படை” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பசுமை பாதுகாப்பு, நீர் வளங்கள் பராமரிப்பு, கல்வி உதவித் திட்டங்கள், கோவில் தன்னார்வப் பணிகள் போன்றவை முருக பக்தர் மையங்கள் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆகவே மதுரையில் தொடங்கிய இந்த ஆன்மீக இயக்கம், திருச்செந்தூரில் நிறைவடையும் போது ஒரு தேச அளவிலான ஒற்றுமை விழா ஆக மாறவிருக்கிறது.

நடிகர் ரஞ்சித் போன்ற சமூக விழிப்புணர்வுள்ள நபர்கள் இதில் பங்கேற்பது நிகழ்வின் முக்கியத்துவத்தை உயர்த்துகிறது. மதம், மனிதம், அரசியல், சமூகப் பொறுப்பு என இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வாக இந்த முருக பக்தர் மாநாடு வரலாற்றில் இடம்பிடிக்கும்.

இதையும் படிங்க: பிக்பாஸ் செட்டை இங்க எதுக்கு போட்டீங்க.. உடனே காலி பண்ணுங்க..! அரசு எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share