என்னவென்று சொல்வதமா ராசி கண்ணா பேரழகே..! ஒரே பதிவால் ரசிகர்களை மயக்கும் நடிகை..!
அழகான சேலையில் ஆளை மயக்கும் கோலத்தில் வந்துள்ளார் நடிகை ராசி கண்ணா.
பார்க்க அழகாகவும் பளபளக்கும் பளிங்கு கல் போல முகத்தை உடையவர் தான் ராசி கண்ணா. பார்க்க அழகாக இருக்கும் இவர் உண்மையிலேயே குழந்தை உள்ளம் கொண்டவர் என்பது அவரது சிரிப்பில் தெரியும். கோபத்தில் உக்கிரமாய் இருப்பவர்கள் கூட இவரை கண்டால் குழந்தையாக மாறி விடுவார்கள்.
அந்த அளவிற்க்கு அவரது பேச்சு இருக்கும். என்னவென்றே தெரியவில்லை படம் சரியாக வசூல் ஆக மாட்டிக்கிறதே என வருத்தப்படும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ராசியாக வந்தவர் தான் ராசிக்கண்ணா.
இதையும் படிங்க: ஹிட் கொடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி படம்..! ஒரே நாள் வசூலில் சாதனை..!
ஏனெனில் இவரது படத்தை பார்க்க கூட்டம் அப்படி அள்ளும். உதாரணமாக, அரண்மனை 4ல் "அச்சச்சோ" பாடலுக்காவே இவரை காண பல கோடி கூட்டங்கள் தியேட்டர் வாசலில் காத்திருந்தனர்.
இதுவரை அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், அயோக்யா, வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர், அரண்மனை 3, துக்ளக் தர்பார், சர்தார், கடைசி விவசாயி, திருச்சிற்றம்பலம், அரண்மனை 4, அகத்தியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ராசி கண்ணா, 2015ம் ஆண்டு 'பெங்கால் டைகர்' என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பின் 2016ம் ஆண்டு "சுப்ரீம்" படத்திலும், 2017ம் ஆண்டு "ஜெய் லவ குசா" என்ற படத்திலும், 2018ம் ஆண்டு "தோலி ப்ரேமா" போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை ஈர்த்தார். இதனை அடுத்து ரவிமோகனுக்கு ஜோடியாக "அடங்க மறு" என்ற படத்தில் நடித்தார்.
அதன் பின், அயோத்தி, சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழி ரசிகர்களை கவர்ந்த ராசி கண்ணா, தற்பொழுது சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் "யோதா" என்ற ஹிந்தி படத்திலும் "தி சபர்மதி ரிப்போர்ட்" என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே "ருத்ரா" என்ற வெப் தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த ராசி கண்ணா அதற்கு பின், ஹிந்தி மொழியில் இருந்து 4 மொழிகளில் டப்பிங் செய்து அமேசான் பிரைமில் ரிலீசான "பார்ர்சி" என்ற வெப்சீரிஸ் நடித்து இருந்தார். இந்த தொடர் மெஹா ஹிட்டானது.
இதனை தொடர்ந்து "விக்ராந்த் மாஸ்ஸியுடன் இணைந்து TME" என்ற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள ராசி கண்ணா, சித்து ஜொன்னலகடாவுடன் "தெலுசு கட" என்ற தெலுங்குப் படத்திலும் நடிக்கவுள்ளார். அதன் பின் தமிழில் ஜீவா மற்றும் அர்ஜுன் இணைந்து நடிக்கும் "மேதாவி" படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கோடை காலத்தில் NO THEATRES..! ஓடிடியில் வெளியாகும் படங்களை வீட்டிலிருந்தே பாருங்கள்..!