திடீர்னு குடும்ப பெண்ணாக மாறிய கயாடு லோஹர்..!! நீல நிற புடவையில் தேவதை போல் ஜொலித்த போட்டோஸ் வைரல்..!
நீல நிற புடவையில் தேவதை போல் ஜொலித்த கயாடு லோஹர் புகைப்படங்கள் அதிரடியாக வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் கயாடு லோஹர், தனது புதிய புகைப்படங்களால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நெற்றியில் சிறிய பொட்டு, சொக்க வைக்கும் நீல நிற புடவை, எளிமையான அலங்காரம் என பாரம்பரிய தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: சிம்புவுக்கும் எனக்கும்.. யாரோ செய்வினை வச்சிட்டாங்க..!! இனி எல்லாமே விதியின் கையில் தான் - கயாடு லோஹர் ஓபன் டாக்..!
திரைப்படங்களில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறுவது வழக்கமாகிவிட்டது.
குறிப்பாக, நடிகைகள் தங்களது விதவிதமான தோற்றங்களை பகிரும் போது, அவை சில மணி நேரங்களிலேயே அதிகம் பகிரப்பட்டு பேசுபொருளாக மாறுகின்றன. அந்த வகையில், கயாடு லோஹரின் சமீபத்திய புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
கன்னட திரையுலகில் அறிமுகமான கயாடு லோஹர், தனது நடிப்பு மற்றும் அழகான திரை தோற்றத்தின் மூலம் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் கயாடு லோஹர் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
இதையும் படிங்க: சிம்புவுக்கும் எனக்கும்.. யாரோ செய்வினை வச்சிட்டாங்க..!! இனி எல்லாமே விதியின் கையில் தான் - கயாடு லோஹர் ஓபன் டாக்..!