×
 

திருமணம் முடிஞ்ச கையோடு வெயிட் கூடியாச்சு..! குறைக்க இத மட்டும் தான் செய்தேன் - நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!

திருமணத்துக்குப் பிறகு 9 கிலோ எடையை குறைத்த ரகசியத்தை கீர்த்தி சுரேஷ் உடைத்துள்ளார்.  

தென்னிந்திய சினிமாவின் அழகு மற்றும் திறமையின் உருவாக திகழ்கிறவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி ரசிகர்களிடமும் தனிக்கவனம் பெற்றுள்ள இவர், தேசிய விருதை பெற்றதன் மூலம் தனது நடிப்புத் திறனை நிரூபித்திருக்கிறார். இப்படி இருக்க சமீபத்தில் திருமணமான பிறகும், தனது திரைப்பயணத்தில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக்கொண்டு  வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பல புதிய படங்களில் நடித்து வருகிறார்.

அதேசமயம், தனது உடல் எடையை அதிரடியாக குறைத்துள்ளார் என்ற தகவல் தற்போது திரையுலகத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த மாற்றத்தை எவ்வாறு சாதித்தார் என்பதைப் பற்றியும், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விரிவாகக் கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் திரையுலகிலிருந்து ஓய்வு பெறுவதும், புதிய வாய்ப்புகளை தவிர்ப்பதும் சாதாரணமாகவே இருக்கிறது. ஆனால், கீர்த்தி சுரேஷ் அப்படி யோசிக்காமல் தனது திரைப்பட பயணத்தை தொடர்ந்து முன்னேற்று வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் தமிழ் திரைப்படங்கள் என பார்த்தால், 'ரிவால்வர் ரீட்டா', 'கன்னிவெடி' மேலும், தெலுங்கில் புதிய கதைகள் கேட்டு வருகின்றதாகவும், விரைவில் சில அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை கட்டுப்படுத்தியது தொடர்பாக கூறுகையில், "திருமணத்துக்குப் பிறகு சில காரணங்களால் உடல் எடை சற்று கூடிவிட்டது. இது என்னை முதலில் சோர்வடையச் செய்தது. ஆனால், நான் என் சினிமா பயணத்தில் தொடர விரும்பினேன். அதற்காக உடற்பயிற்சியைக் கடுமையாக மேற்கொண்டேன். அதற்காக நான் வாரத்திற்கு 300 நிமிடங்கள் அதாவது, ஒரு வாரத்திற்கு சுமார் 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்து, குறிப்பாக கார்டியோ, ஸ்ட்ரெஞ்ச் ட்ரெயினிங், யோகா உள்ளிட்ட பயிற்சிகளை செய்தேன். மேலும், உணவு பழக்கத்திலும் மாற்றங்கள் செய்தேன். இதனால், சுமார் 9 கிலோ எடையை என்னால் குறைக்க முடிந்தது" என்றார்.

மேலும் உடற்பயிற்சியுடன் சேர்த்து உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட முக்கிய உணவுப் பழக்கங்களில் "அதிக பரிமாணங்களில் ப்ரோட்டீன் சேர்த்தல்,  ரெஃபைன் செய்யாத கார்போஹைட்ரேட் உணவுகள், அதிக நார்ச்சத்து மற்றும் சத்துணவுகள், அதிக நீர் அருந்துதல் மற்றும் Junk foods, process foods தவிர்ப்பு என உணவிலும் கட்டுப்பாடு, பயிற்சியிலும் தொடர்ந்த அக்கறை இருந்தால் மட்டுமே நல்ல மாற்றம் வரும். முடிவுகள் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் தொடர்ந்து செய்வது அவசியம்" என்றார் கீர்த்தி.. அதோடு உடல்நலத்தின் முக்கியத்துவம் குறித்து கூறும் கீர்த்தி சுரேஷ், " ஆண்கள் போல பெண்களும் உடற்பயிற்சியை முக்கியமாக எடுத்துக் கொள்வது அவசியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனமும் உற்சாகமாக இருக்கும். உடல்நலத்தை குறைத்து காட்டுவது ஒரு அழகுக்கான முயற்சி அல்ல, இது வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தும் ஒரு செயலாக இருக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: வித்தியாசமான உடையில் மொத்த அழகையும் வெளிப்படுத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்..! போட்டோஸ் வைரல்..!

இது தற்போது சமூக ஊடகங்களில் பல பெண்கள் மத்தியில் மோட்டிவேஷனாக பரவி வருகிறது. இப்படி இருக்க, சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் உடல் எடையை குறைத்த  புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. சில புகைப்படங்களில் அவர் ஸ்டைலான உடையில், புதிய அழகு பொலிவுடன் தோன்றியிருந்தார். எனவே கீர்த்தியின் இந்த முயற்சியை பல திரையுலக நண்பர்கள் பாராட்டியுள்ளனர். நடிகைகள் மற்றும் மாடல்களிடையே ஒரு வெறுமனே அழகு அல்ல, ஆரோக்கியம் தான் முக்கியம் என்ற புரிதலை வளர்த்திருக்கிறார் என்ற கருத்துகள் அதிகம். ஆகவே கீர்த்தி சுரேஷ், திருமணத்துக்குப் பிறகு திரையுலகில் தொடர்ந்து நடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது ஆரோக்கியத்தையும், உடல் எடையையும் கட்டுப்படுத்தும் முயற்சி மூலம் பலருக்கு மாதிரியாக திகழ்கிறார்.

அவரது 9 கிலோ எடை குறைப்பு வெறும் அழகுக்கான வெற்றி அல்ல, அதுவே அவரது உழைப்பு, தன்னம்பிக்கை, திட்டமிடல் ஆகியவற்றின் விளைவாகும். இதைப் போல பலர் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை மேம்படுத்தும் காலம் இது. கீர்த்தியின் அனுபவம், மற்ற பெண்களுக்கும் சிறந்த ஊக்கமாக அமையும் என்பது உறுதி.

இதையும் படிங்க: அப்செட்டானா இதெல்லாமா பண்ணுவாங்க..! இணையத்தில் பேசுபொருளாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ் பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share