வெள்ளை நிற கோட் சூட்டில் செம்ம ஸ்டைலிஷ் லுக்..!! கிளாஸ் மற்றும் கிளாமர் காம்போவில் இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் வெள்ளை நிற கோட் சூட்டில் செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற நடிகையாக இருந்தாலும், காலத்திற்கு ஏற்ப தனது திரைமுகத்தையும், ஃபேஷன் ஸ்டைலையும் தொடர்ந்து மாற்றிக்கொண்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ஆரம்பத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், கடந்த சில ஆண்டுகளாக தனது திரைத் தேர்வுகளிலும், தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க: ‘செந்தூரப்பூவே’ ஸ்ரீநிதி மேனனின் கிளாமர் லுக்..!! மாஸ் காட்டும் அழகிய போட்டோஸ் வைரல்..!
திரைப்படங்களில் மட்டுமல்லாமல், விருது வழங்கும் விழாக்கள், திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோக்கள் மற்றும் போட்டோஷூட்கள் என எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், தனது உடைத் தேர்வு மூலம் கவனத்தை ஈர்க்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் மாறியுள்ளார்.
இந்நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது திரைப்பயணத்தின் ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் பாரம்பரிய தோற்றத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.
புடவை, சல்வார், எளிமையான உடைகள் என இயல்பான தோற்றத்திலேயே அவர் அதிகம் காணப்பட்டார். அந்த எளிமையான பிம்பமே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
ஆனால், காலப்போக்கில் தனது கதாபாத்திரத் தேர்வுகளிலும், ஃபேஷன் அணுகுமுறையிலும் அவர் மாற்றத்தை கொண்டு வந்தார்.
இதையும் படிங்க: மனநிம்மதிக்காக ஆஸ்திரேலியா சென்ற திரிஷா..!! விடாமல் விஜய் குறித்து கேள்வி கேட்கும் ரசிகர்கள்.. நடிகையின் ரியாக்ஷன்..!