×
 

கியாரா அத்வானியின் நீச்சல் உடை காட்சிகள் நீக்கம்..! 'வார் 2' படத்துக்கு தணிக்கை குழு அதிரடி உத்தரவு..!

'வார் 2' படத்தில் அணிஅவரது கவனத்தையும் பெற்ற கியாரா அத்வானியின் நீச்சல் உடை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம் என்றால் அது தான் "வார் 2". இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது. ஹிரோயிக் ஆக்ஷன், அதிரடியான துப்பாக்கிச் சண்டைகள், ஸ்டைலான ஹீரோக்கள் என அனைத்து அம்சங்களும் ஒரே கதையிலான இந்தப் படத்தில், பாலிவுட் சின்னத்திரை இளநிலா ஹிரோ ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் தென்னிந்திய சினிமாவின் பெருமைமிக்க ஜூனியர் என்.டி.ஆர், முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இப்படி இருக்க, யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஆயான் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 2019ல் வெளியான வார் படத்தின் தொடர்ச்சியாகும். அதாவது இது "யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸ்" படத் தொடரின் அடுத்த கட்டம். இந்த நிலையில் படம் வெளிவருவதற்குள் ஹைப் கிளப்பும் வகையில், படத்தின் ப்ரொமோ, டீசர், மற்றும் பிற காட்சி கசிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முக்கியமாக, கதாநாயகியாக நடித்துள்ள கியாரா அத்வானியின் நீச்சல் உடை காட்சிகள் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தன. இந்சூழலில், படத்திலிருந்து கியாரா அத்வானி நடித்த 9 வினாடிகள் நீச்சல் உடை காட்சிகள் தணிக்கை குழுவின் உத்தரவின்படி நீக்கப்பட்டுள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகி பெரும் கவனத்தை பெற்றுள்ளது. காணொளி வடிவில் வெளிவந்த அந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பலத்த எதிர்வினைகளை உருவாக்கியிருந்தன.

பலரும் அந்த காட்சிகளை ரசித்தாலும், சில பிரிவினரும் அதைப் பார்த்து படத்தின் முக்கியமான கதைக்கு இது தேவையில்லாத காட்சிகள் என்ற விமர்சனங்களை முன்வைத்தனர். இதையடுத்து, சினிமா தணிக்கை குழுவான CBFC அந்த காட்சிகள் அதிக ஆபாசமாக உள்ளது என்றும், எனவே அதனை சார்ந்த காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் படக்குழுவிற்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தணிக்கை குழுவின் பரிந்துரை, ஆலோசனைகள் மற்றும் சர்வதேச ரிலீஸுக்கான திட்டங்களை கணக்கில் எடுத்துக்கொண்ட தயாரிப்பு குழுவும், அந்த காட்சிகளை வெட்ட முடிவு செய்துள்ளது. இதன் பின்னர், படம் U/A சான்றிதழ் பெற்று, வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் தோற்றம், ஸ்டைல், மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் பங்கேற்பு ரசிகர்களிடையே தற்போது ஒரு பெரிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: 200 கிலோ நகை..! தங்கத்தால் ஜொலித்த நடிகை ஐஸ்வர்யா ராய்..! பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை பேரா..!

படத்தில் அவருடைய காட்சிகள், ஹிரோயினாக மட்டுமின்றி ஒரு ஸ்பை ரோலிலும் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நீக்கப்பட்ட 9 வினாடிகள் காட்சிகள் மூலம், கிளாமர் ஓவர் டோஸ் என சிலர் விமர்சித்தனர். இந்தப் படம் ஒரு ஸ்பை திரில்லராக உருவாகியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நுட்பமான உறவுகளை அடிப்படையாகக் கொண்டு, உலகளாவிய பயங்கரவாதம், பின்புல அரசியல் மற்றும் உளவுத்துறையின் சவால்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ஹ்ரித்திக் ரோஷன் இப்போது கபீர் எனும் சக்திவாய்ந்த ஸ்பை கதாபாத்திரமாக மீண்டும் திரும்பி வருகிறார். அவருடன் ஜூனியர் என்.டி.ஆர் எதிரணி வேடமா, துணை ஹீரோவாக வருவது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால், இவர்களுடைய டீசரில் வரும் மோதலான சண்டை காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. எனவே "வார் 2" வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்திலிருந்து கியாரா அத்வானியின் 9 வினாடி காட்சிகள் நீக்கப்பட்டுள்ள செய்தி, இந்த திரைப்படத்துக்கு மேலும் ஹைலைட் ஆகிவிட்டது. படம் வெளியானவுடன், அந்த நீக்கப்பட்ட காட்சிகள் பற்றிய விவாதங்கள் மீண்டும் மீண்டும் எழ வாய்ப்புள்ளது.

ஆனாலும், கதையின் போக்கு, ஹிரோஸ் ஃபர்மான்ஸ், மற்றும் தொழில்நுட்ப தரம், இந்தப்படத்தை வெற்றிப்படமாக மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சேலையில் அழகிய தோற்றத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share