தோனியின் காதலி கர்ப்பமாக உள்ளாரா..! புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியில் நடிகை..!
கியாரா அத்வானி வெளியிட்ட அட்டகாசமான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
யாருக்கெல்லாம் கிரிக்கெட்டில் தல என்று அழைக்கப்படும் தோனியை தெரியுமோ அவர்களுக்கு கண்டிப்பாக கியாரா அத்வானி யார் என தெரியும்.
காரணம் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்த மகேந்திர சிங் தோனியின் பயோபிக் படத்தில் சாக்ஷி தோனி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கியாரா அத்வானி.
இதையும் படிங்க: சுந்தரி நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!
அதுமட்டுமல்லாமல் இவர் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆக காரணம் இவரை நடித்த நெட்பிளிக்ஸ் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜி படத்தால் தான். இப்படத்தில் அவர் கொடுத்த ஒரு ரியாக்ஷன் மீம்களில் பரவ
அவரும் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தார். மேலும் பாலிவுட் ஹீரோயின்கள் வரிசையில் முன்னணியில் இருக்கும் நடிகை கியாரா அத்வானிக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக கையில் உள்ளன.
இதனை அடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான "ஷெர்ஷா" என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் நடித்து இருந்தனர்.
இந்த படப்பிடிப்பின் பொழுது இவர்கள் இருவரும் நண்பர்களாக மாறி பின் நாளடைவில் அது காதலாக மாறியது. பின் வீட்டிலுள்ள அனைவரது சம்மதத்தின் பேரில் இருவரது திருமணம் விமர்சையாக நடைபெற்றது.
இந்த சூழலில் கடந்து சில நாட்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக உள்ள செய்தியை உலகிற்கு அறிவித்தார் நடிகை கியாரா அத்வானி.
இந்த நிலையில், தனது குழந்தை பிறக்கும் முன் பல புகைப்படங்களை அழகாக எடுத்து வைத்து தன் குழந்தையிடம் காண்பிக்க ஆசைப்படும் கியாரா தனது கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது அழகிய கருமை நிற உடையில் தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ள சம்பத் ராமுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!