“லியோவில் என்னை வீணடித்துவிட்டார்” – சஞ்சய்தத்தின் கருத்து விமர்சனத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதிலடி..!
பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் கருத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
2023-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் விஜய் நடித்த ப்ளடி ஸ்விட்டான திரைப்படம் தான் "லியோ". இப்படம் வெற்றி அடைந்ததுடன் பாக்ஸ்ஆபிஸிலும் புதிய சாதனைப் பெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ படத்தில் பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்தனர். இதில் பாலிவுட் நட்சத்திரமான சஞ்சய் தத், விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார்.
இந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் ஒரு பேட்டியில், "லியோ படத்தில் என்னை வீணடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்" என விமர்சித்து பேசி இருந்தார். அந்த காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், ரசிகர்களிடையே இது பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியது. சிலர் சஞ்சய் தத்தின் கருத்தை ஆதரிக்க, இன்னொருப் பக்கம் லோகேஷை குறை கூறவும் தயாராகி இருக்கின்றனர். எனவே இந்த சர்ச்சைக்குப் பதிலளிக்கும் வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சமீபத்திய நேர்காணலில் விளக்கம் அளித்துள்ளார். அதில், " அந்தக் கருத்து வெளியான அடுத்த நிமிடமே நடிகர் சஞ்சய் சார் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் என்னிடம் ‘நான் வேடிக்கையாக தான் சொன்னேன். ஆனால் அதை சமூக ஊடகங்களில் பெரிதாக்கி விட்டார்கள். அது எனக்கு சங்கடமாக இருக்கு’ என்று கூறினார். நானும் ‘பிரச்சினை இல்லை சார். என்ன நடந்தது என நமக்கு தெரியும். அதற்காக பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கத் தேவையில்லை’ என்று சொன்னேன். அதோடு நான் ஒரு மேதை இயக்குநர் அல்ல. சிறந்தவனாக இல்லாத போதும், என் படங்களில் செய்த தவறுகளிலிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். என் வளர்ச்சிப் பாதையில் சில பிழைகள் நிச்சயம் இருந்திருக்கலாம். ஆனால் அதை நான் மறுக்காமல் திருத்திக் கொள்கிறேன். ஒரு விஷயம் உறுதியாகச் சொல்கிறேன்.. நிச்சயமாக நான் சஞ்சய் தத் சாருடன் மீண்டும் ஒரு படத்தில் பணியாற்றப் போகிறேன்" என உறுதியுடன் கூறியுள்ளார்.
இப்படி, லோகேஷ் தனது நேர்மையான பதிலின் மூலம், அவருக்கும் தனக்கும் இடையே எந்த விரோதமும் இல்லையென வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் சஞ்சய் தத்துடன் மீண்டும் ஒரு படம் செய்ய விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத் நடித்த ‘ஹரோல்ட் தாஸ்’ என்ற கதாபாத்திரம் குறைந்த அளவில் திரையிடப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்ததும் உண்மை தான். ஆனால் படத்தின் ஓவர்ஆல் நரேஷ் பாக்கியத்துடன் கதை நகரும் வகையில் அந்தப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் "கூலி"..! புது தளபதி-யை காண தயாரா.. நெகிழ்ச்சியில் ரஜினி..!
ஆனால் சஞ்சய் தத்தின் புகழுக்கு ஏற்ப அவரை மேலும் முழுமையாக பயன்படுத்த வேண்டியிருந்தது என ரசிகர்கள் எண்ணியது உண்மை என்பதால் லோகேஷ் அடுத்தக்கட்ட முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில், ‘லோகேஷ் யுனிவர்ஸ்’ என அழைக்கப்படும் கனகராஜின் தொடர்ச்சியான கதை இயக்கத்தில், சஞ்சய் தத்தை மீண்டும் வலிமையான கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தற்பொழுது உருவாகியுள்ளது. எனவே, ஒரு தாழ்ந்த மனப்பான்மையுடன், விமர்சனத்தை நேர்மையாக ஏற்றுக் கொண்டு, அடுத்த முயற்சிக்குத் தயாராக இருப்பது போன்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இந்த அணுகுமுறை, அவரின் ஒழுக்கமான சினிமா பண்புகளைச் சுட்டிக்காட்டும் விதமாக பார்க்கப்படுகிறது.
சஞ்சய் தத்துடன் மீண்டும் இணையும் நாளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 'லியோ' படத்தில் என் உழைப்பு வீணாபோக காரணம் இவர் தான்..! நடிகர் சஞ்சய் தத் காட்டமான பேச்சு..!