நவராத்திரி ஸ்பெஷல்..!! சேலையில் தேவதை போல ஜொலிக்கும் மாளவிகா மோகனன்..!
நடிகை மாளவிகா மோகனன் சேலையில் தேவதை போல ஜொலிக்கும் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் தனது அழகாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.
மலையாளத் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
இதையும் படிங்க: லெஹங்கா உடையில் தேவதை போல ஜொலிக்கும் ஸ்ரீலீலா.!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
குறிப்பாக, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.
படங்களில் நடிப்பதுடன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, தற்போது நவராத்திரி சிறப்பாக சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் தங்களது திறமையை நிரூபித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பது என்பது எளிதான விஷயமல்ல.
அதிலும் ஏற்கெனவே பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும்போது, அவர்களுக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில், மாளவிகா மோகனனின் தமிழ் சினிமா பயணம் பல்வேறு முக்கியமான படங்களின் வழியாக அமைந்துள்ளது.
மலையாளத் திரையுலகில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய மாளவிகா, தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையும் படிங்க: நடிகை அர்ச்சனா குமாருக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சா..! வாழ்த்தோடு சேர்த்து கவலையில் இளசுகள்..!