×
 

ரஜினியை அலறவிட்ட கேரள ரசிகர்கள்..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சுவாரசியம்..!

ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேராளாவிற்கு சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த திரைப்படம் தான் ஜெயிலர். அதற்கு காரணம் நெல்சன் திலீப் குமாரின் படைப்புதான். இதில் அனிரூத்தின் இசை மக்களை மட்டுமல்லாது ரஜினியையே கவரும் அளவிற்கு இருந்தது. குறிப்பாக "அலப்பறை கிளப்புவோம், காவாலையா" போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் மக்களை கேட்க வைத்தது.

இப்படத்தில், தன் மகனுக்காக மீண்டும் ஜெயிலராக மாறினால் என்ன நடக்கும் என்பதை வில்லனுக்கு தெளிவாக காண்பிப்பார் ரஜினிகாந்த. மேலும் வீட்டில் பொட்டி பாம்பாய் அடங்கி இருந்த ஜெயிலர் தனது மகனை கண்டுபிடிக்கும் போராட்டத்தில், தனது மனைவி கதாபாத்திரத்தில் நடித்த நீலாம்பரியையே (ரம்யாகிருஷ்ணன்) அவர் வாயால் "போதும் இதோட கொஞ்சம் நிறுத்திக்கொள்ளலாமே" என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் படையப்பாவை கண்முன் கொண்டு வந்தார். மேலும் இப்படத்தில் காமெடி என பார்த்தால் "பாரதியார் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா" என ஒவ்வொரு முறையும் கூறி அனைவரையும் சிரிக்க வைத்து இருப்பார் யோகி பாபு. 

இதையும் படிங்க: ரஜினி - கமல் முதல் கோடம்பாக்கமே ஒன்று திரண்ட ஐசரி கணேஷ் மகள் திருமணம்! வைரல் போட்டோஸ்!

இதை தொடர்ந்து, படம் ரிலீஸ் ஆகி, மாஸ் ஹிட் கொடுத்து ரூ600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இதனால் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கும். படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கும் "போர்ஷே கேயென்" ரக (Porsche cayenne) காரையும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு BMW X7 காரையும் பரிசாக அளித்தார் சன் பிச்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறன்.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கும் இந்த வேளையில் நடிகர் ரஜினிகாந்த் தனக்குண்டான பாகங்களை கோயம்புத்தூரில் நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படத்தை குறித்து பேசிய யோகி பாபு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அருமையாக உள்ளது என தெரிவித்தார்.

பின்னர் சிவராஜ்குமாரும் இப்படத்தில் இணைந்துள்ளார். மோகன்லாலிடமும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பேசிவருகிறார். இந்த சூழலில் இப்படத்தில் புதியதாக கெஸ்ட் ரோலில் இணைந்திருக்கிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்னன். அவர் வரும் சில நிமிட காட்சிகளுக்கு ரூ.50 கோடி ரூபாய் சம்பளமாகவும் கேட்டுள்ளார். இப்படி இருக்க ஜெயிலர் 2வில் மீதமுள்ள காட்சிகளை படமாக்கும் பணிகள் கேரளாலாவில் தொடங்கியுள்ளது. இதற்காக கேரளாவிற்கு சென்ற ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ரஜினியின் கூலி படத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினி அரசியலுக்கு வருவது உண்மைதான்..! லதா ரஜினிகாந்த் பகீர் பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share